சிறுகதை: ஒரு ரோபோவின் தற்கொலை!

எதிர்காலக் காதலின் சிக்கல்களையும், அறிவியல் புரட்சியையும் விவரிக்கும் சிந்தனையைத் தூண்டும் சிறுகதை
சிறுகதை |  A robotic man
சிறுகதை | A robotic manImage credit: Chatgpt
கே.என்.சுவாமிநாதன்

பொறியியல் பயின்று அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன்.. கதைகள், கட்டுரைகள், வெளியான இதழ்கள் - தினமலர் வாரமலர், கலைமகள், அமுதசுரபி, , தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு தீபம், கோகுலம் கல்கி ஆன் லைன். பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம் ஆகியவை. புத்தகங்கள் இரண்டு. கே.என்.சுவாமிநாதன், சென்னை

Updated on: 
Kalki Strip
Kalki Strip

22வது நூற்றாண்டு...

“என்ன மாலதி, இன்னிக்கு ஆபிஸ்க்கு லேட்” என்று கேட்டான் கார்த்திக். “அப்பா, அம்மா எங்க அண்ணன் வீட்டுக்கு பெங்களூர் வந்திருக்காங்க. அவங்க கல்யாண நாள் இன்னிக்கு. காலையில ப்ரேக்பாஸ்ட் சாப்பிட பெங்களூர் மவான்னு கூப்பிட்டாங்க. என்னோட ட்ரோன்கார்ல காலையில கிளம்பி போய்ட்டு வந்தேன். ரோட்ல ட்ராபிக் அதிகமா இருக்கேன்னு பார்த்தா, வானத்திலேயும் டிராஃபிக் அதிகமா இருக்கு” என்றாள் மாலதி.

“நம்ம கல்யாண விஷயம் பத்தி அப்பா, அம்மாகிட்ட பேசினியா மாலதி. அவங்க ஒத்துப்பாங்களா அப்படிங்கிற கவலை எனக்கிருக்கு.”

“கார்த்திக், எங்க அண்ணா கல்யாணமும் கலப்புத் திருமணம். அதனால, எங்க வீட்டில மறுப்பு சொல்லமாட்டாங்க. நான் ஒருத்தரை மனசில நினைச்சுக்கிட்டு இருக்கேன் அப்படின்னு அம்மாவுக்குத் தெரியும். வாரக் கடைசியில அப்பா, அம்மாகிட்ட பேச டெல்லி போவேன். நல்ல செய்தியோட வருவேன்” என்றாள் மாலதி.

கார்த்திக் தலையாட்டினாலும், அவன் மனம் சமாதானம் அடையவில்லை. சமீபகாலமாக கலப்புத் திருமணங்கள் பிரச்னையால், கொலை, தற்கொலை அதிகமாகி உள்ளன. “மாலதி இல்லையென்றால் இந்த வாழ்க்கைக்கே அர்த்தமில்லை” என்ற மனநிலையில் உள்ளான் கார்த்திக்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com