சிறுகதை: ஆயுள் தண்டனை!

நாற்பது வருடங்களுக்கு முன்பு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு மனநிம்மதி அடைந்த ஒருவரின் நெகிழ்ச்சியான சிறுகதை.
சிறுகதை | Two friends are speaking
சிறுகதை | Two friends are speakingImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

வழக்கம்போல நாரயணன் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, மாதவ சேட்டனின் பேக்கரிக்கு வந்தார். அந்தக் காலை நேரத்திலேயே பேக்கரியில் கூட்டமாக இருந்தது. அங்கே அவர் உட்கார இடம் தேடிய பொழுது, அங்கேயிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, அன்றைய தின செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய மனதில், பல வருடங்களாக நிழலாடுகிற அதே முகம். அவரோடு பள்ளியில் படித்த சதாசிவம்தான் அது. நாராயணனுக்கு, இதயம் ஒரு கணம் நின்று துடித்ததுபோல் இருந்தது.

ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முந்தைய அந்தக் காட்சிகள், நாரயணனின் நினைவில் தோன்றியது. அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது, ஈசாப் நீதிக்கதை புத்தகம் வேண்டுவோர், அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்ளுமாறு, வகுப்பு ஆசிரியர் சொல்லி இருந்தார்.

அதற்காக நாராயணன், வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த பணத்தை, பள்ளியில் வந்து பார்க்கும்பொழுது, காணவில்லை. கவலையோடு அதை அங்கும் இங்குமாக தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. வீட்டுக்கு தெரிந்தால், சரியான அடி வாங்கவேண்டி வரும் என்ற பயம், அவருக்கு வந்துவிட்டது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com