சிறுகதை: அழுக்குப் பிள்ளையார்!

Dirty  Vinayagar Temple
Tamil short story: Vinayagar TempleImg credit: AI Image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on
Kalki Strip
Kalki Strip

கடவுள் உண்டா இல்லையா என்பதைவிட பேய் உண்டா...? இல்லையா? என்பதே பலரது சந்தேகம். பிசாசுகள் வெள்ளையாய் தலைவிரி கோலமாய் பாழடைந்த கட்டடங்கள், இருண்ட குகைகள் இவற்றில் இருக்குமா...?

இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் வீடியோவில் வருவதைப்போல். உங்களைப் போலவே பாஸ்கருக்கும் சந்தேகம் வரும். இணையத்தில் பாரா நார்மல் செயற்பாடுகள் வீடியோக்களை அவனும் பார்த்ததுண்டு. இதுவரை அவன் கண்ணில் ஒரிஜினல் பேய் பட்டதில்லை. சில சமயம் அவன் தங்கை தலைவிரி கோலமாய் வீட்டில் உலா வரும்போது, “ஏண்டி இப்படி பேயாட்டம் அலையறே”, என அம்மா திட்டுவதைக் கேட்டிருக்கிறான்.

ஆனானப்பட்ட ஐன்ஸ்டீன்கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் பேய் பிசாசுகள் இருக்கலாம் என சொல்லி இருக்கார். "இந்த உலகில் ஆத்மாவுக்கு அழிவில்லை. சக்திக்கும் அழிவில்லை. வேறு ரூபமாக மாறுமே ஒழிய அழியாது" என அவரே சொல்லிவிட்டார்.

பாஸ்கர் கூட இதையெல்லாம் நம்புபவன் இல்லைதான் போன மாசம் வரை...

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com