

வருடம் 5110.
ஸ்பேசில் ஸ்கூல்.
“எறும்பு தான் ஜீனியைத்தேடி ஓடனும். ஜீனி எறும்பை தேடி வராது" ரோபோ டீச்சர் அஆ123 மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருந்தாள்.
“உங்கள் வருகை இப்போது தேவை” காற்றலை போனில் ஆர்டரான அழைப்பு”
“எதற்கு நான் வரனும்? ஒரு தப்பும் செய்யலையே? மேலும் நான் இப்போது க்ளாஸ் எடுத்துக்கிட்டிருக்கேன்” மெல்லிய குரலில் மறுப்பு.
“அது உங்க ப்ராப்ளம். உடனே வருகை தரவேண்டும்”
“முடியாது. வேலையை விட்டு தூக்கிடுவாங்க”.
“இப்ப வரலைனாலும் அதுதான் நடக்கும். 12 மணிக்குள்ளே உங்க கேஸை முடிக்கனும். இல்லைனா என் வேலையும் போயிடும் ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்.." ஆர்டர் கெஞ்சலானது.
“என்ன கேஸா? என் மீதா? புல்ஷிட்! அஆ123 எரிந்து விழுந்தது.