

ஒரு ஞாயிறு காலை தான் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவைப் பார்த்தபடி, வேட்டைக்கார ஜம்பு சோகமாக ஈஸி சேரில் உட்கார்ந்திருந்தார்.
துப்பாக்கி போச்சே...
தப்பித்த இரவு, சிறுத்தை போகிற போக்கில் கவ்வி தூக்கிச் சென்றதை அவர் அறியார்.
துப்பாக்கி மாயமானது மாயமானதே... எப்படி காணாமல் போச்சு என ஒரே சிந்தனை.
அப்போது வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
கலெக்டர் கோட் சூட்டுடன். அதிகாரிகள் புடைசூழ வந்து... வணக்கம் தெரிவித்தார். இவரும் எழுந்து வணங்கி நின்றார்.
"ஜம்பு சார்... ஒரு முக்கியமான விஷயம்...சிங்கப்பூங்காவுக்குச் சிங்கத்தை வேடிக்கை பார்க்க வளைகுடா நாட்டு ஷேக் குடும்ப பெரிய ராணி ஒரு கூண்டு காரில் போனார். அருகில் வந்த சிங்கத்துக்கு ஜன்னல் ஓட்டை வழியே பிஸ்கட் போட்டாராம். அது அவருடைய கைப் பை வாரை இழுத்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டது. அதில் அவர் மொபைல் இருக்கு."
"அதனால் என்ன...? வேறே ஒண்ணு வாங்கிக்க முடியாதா..?" என்றார் ஜம்பு.
"வாங்கலாம்...அந்த மொபைலில்தான் பிட் காயின் பாஸ்வேர்டு, ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் விபரம் எல்லாம் இருக்காம். பல லட்சம் கோடி டாலர் சமாச்சாரம்.