சிறுகதை: ஜேம்ஸ் பாண்டும்... திருடர்களும்!

வங்கி கொள்ளை வழக்கை தீர்க்க ஏ.ஐ உதவியை நம்பிய போலீஸ் ஏட்டு, ஒரு சிறிய தடயத்தை வைத்து பெரிய முடிவெடுக்கிறார். ஆனால், இறுதியில் நடந்த அதிர்ச்சி திருப்பம்.
Tamil short story | Police and 2 young men
Tamil short story | Police and 2 young menImage credit: AI Image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on
Kalki Strip
Kalki Strip

இன்ஸ்பெக்டர் சந்துரு சீலிங் ஃபேனைப் பார்த்தபடி தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அவரிடம் ஒரு ஃபைலை வைக்கப் போன ஏட்டு பாண்டு ரெங்கன் “ஐயா காத்து கம்மியா வருதா.. கூட வைக்கட்டுமா?” என்றார்.

சந்துரு “இல்லை ஏட்டு… பஜார் பேங்கில் கொள்ளை நடந்ததே.. அடிச்சவங்க ஏத்தனை பேர்.. யாருன்னு இதுவரை துப்பு துலங்கவே இல்லை.. ஒரு தடயமும் கிடைக்கலே.. இரண்டு பேர் வந்தானுங்க ஹெல்மெட் போட்டுக்கிட்டு.. துப்பாக்கியைக் காட்டி எல்லோரையும் திரும்பி நிக்கச் சொல்லிட்டு கேஷ் கவுண்டரில் இருந்த 30 லட்சத்தையும் கொண்டு, வெளியே ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி போயிட்டாங்க”

“ஐயா.. சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. சி.சி.டி.வி காட்சிகள் என்ன சொல்லுது?”

“அதே தான்.. வர்றானுங்க.. துப்பாக்கி காட்டறானுங்க.. போறானுங்க அவ்வளவுதான்.”

ஏட்டு பாண்டுரெங்கன் எப்போதும் துப்பறியும் கதைகள் வாசிப்பார்.. அதை போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களிடம் சொல்வார். ஆவருக்கு 'ஜேம்ஸ் பாண்டு' என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com