

பார்க்கில் குப்புசாமி தன் நண்பர்களுடன் வாக்கிங் போனபோது எதிரி்ல் வந்த நபர் ஒருவர், "டேய் குப்பு நல்லா இருக்கியா?"
"அடடே சாமிநாதா வாப்பா எப்படி இருக்கே.." என்றார் குப்புசாமி.
தன் நண்பர்கள் ரிடையர்டு கர்னல் கந்தசாமி, ஓய்வு பெற்ற ஆர்க்கியாலஜிஸ்ட் நாகமுத்துசாமி இவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் குப்புசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர்.
"சார் இவர் தான் சாமிநாதன். என் கிளாஸ்மேட்.. எங்கள் வட்டாரத்தில் சங்கீதம் சாமிநாதன்னு கூப்பிடுவோம்.. ஓய்வு பெற்ற பாங்க் ஆபீஸர்... என்ன சாமிநாதா எப்படி பொழுது போவுது.?"
"எல்லாம் சங்கீதம் தான். தனன்னா.. ன னானே னா. தானேன்னா தன தானா.... ஸா பா மா ஸா ஸா.... ஸா பா மா ஸா ஸா.. இது என்னன்னு சொல்லு குப்பு ?"
"எனக்கு எப்படிப்பா தெரியும்.. நீ தான் சங்கீதத்தைக் கரைச்சுக் குடிச்சவன்.."