

சாந்தனுவுக்கு அன்று 45 ஆவது பிறந்தநாள்.
அவர் கடந்த 20 வருடங்களாக தனியார் மற்றும் தேசிய வங்கியில் பல உயரிய பதவிகளை வகித்து புதுடெல்லி, மும்பை என வாழ்வின் பெரும்பகுதி நகரங்களிலே கழித்தார். Chartered account மற்றும் cost accounting ஆகிய துறைகளில் சிறந்த வல்லமை பெற்று இருந்ததால் ஒரு ஐந்து வருடம் Riyadh உள்ள ஒரு பெரிய வங்கியில் CFO (chief financial officer) ஆக சேர்ந்து வங்கியின் முதன்மை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, அந்த நாட்டு மன்னரின் பெரும் மதிப்பையும் பெற்றார்.
இந்த சமயத்தில்தான் அவர் மிகவும் விரும்பிய தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய தனியார் வங்கியில் நிர்வாக இயக்குனராக (executive director) பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. பெற்றோர் இருவருக்கும் 80 வயதிற்குமேல் ஆகிவிட்டது. அவர்களுடைய கடைசி காலத்தில் அவர்களுடன் சேர்ந்து இருப்பது அவருக்கு மட்டும் இல்ல, அவருடைய மனைவிக்கும், ஒரே மகனுக்கும் பெரிய விருப்பம். எல்லா விருப்பமும் ஒன்றுகூட வங்கியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் அவருக்கு 45 ஆவது பிறந்தநாள் வந்தது.