சிறுகதை: பத்தொன்பதிலிருந்து பேராசிரியர்!

பயத்தை வெற்றியாக மாற்றும் விதம் மற்றும் மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் உண்மை ஊக்கம் நிறைந்த சிறுகதை
சிறுகதை | Teacher and students
சிறுகதை | Teacher and studentsImage credit: Gemini AI
சௌ. சுந்தர்ராஜ்

சௌ. சுந்தர்ராஜ், ஓசூர் செவன்த் டே அட்வெண்ட்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் எழுத்தை நேசிக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளை சுவையான கதைகளாக வடிவமைத்து, வாசகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை உருவாக்கி நல்ல சிந்தனைகளைப் பரப்புவதே இவரது எழுத்துப் பயணத்தின் இலட்சியம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமமான கோடாங்கிபட்டியில் பசுமையான வயல்களும், மாலை நேரத்தில் பள்ளி மணி சத்தமும், அன்பான மக்களும் அந்தக் கிராமத்தின் பெருமை.

அந்தக் கிராமத்தில் விவசாயி முருகனுக்கும், வைதேகிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தான் ஜீவா. அவன் நல்ல குணமுள்ள மாணவன். தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், விளையாட்டு என அனைத்திலும் ஓரளவு தேறினவனாய் இருந்தான். ஆனால் கணக்கு பாடத்தை வெறுத்தவன், கணக்கு டீச்சரை மட்டும் ரொம்ப ரொம்ப நேசித்தான்.

கணக்கு பீரியட் வந்தாலே அவனுக்கு வயிற்று வலி வந்து விடும். ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் சொன்னதே இல்லை. ஒருநாள் கணித ஆசிரியை புஷ்பா கேட்டார்.

“ஜீவா, 8 × 7 எவ்வளவு?”

தயக்கத்துடன், “மேம்… 54...”

வகுப்பு முழுவதும் ஒரே சிரிப்பு சத்தம்.

“தவறான பதில் சொல்வது குற்றமல்ல. முயற்சி செய்யாமல் இருப்பதுதான் குற்றம்,” என்றார்.

கணித வகுப்பு முடிந்தவுடன், மாதத் தேர்வு ரேங்க் கார்டை வகுப்பு ஆசிரியர் தருண் வழங்கினார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com