சிறுகதை: மெண்ட்டோ மீட்டர்!

Kamala and kuppusaami
Tamil short story: Kamala and kuppusaamiImg credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

குப்புசாமியிடம் அவர் நண்பர் ஒரு சின்ன பெட்டியைத் திறந்து காட்டினார்... மெண்ட்டோ மீட்டர்.

அவர் பெயர் கர்னல் கந்தசாமி. பிரெஞ்சு ராணுவ ரிடையர்டு ஆர்மி. ஆப்பிரிக்காவில் இருந்தாராம். டெபுடேஷனில், ஐ நா அமைதிப் படையில் பிரெஞ்சு பட்டாலியனில் தினம் பார்க்கில் அவருடன் பேசி நேரம் கழிப்பார்.

கந்தசாமி பூர்வீகம் புதுச்சேரி. பிரெஞ்ச் பென்ஷன் வாங்கும் குடும்பம். அப்பா, தாத்தா அனைவருமே பிரெஞ்சு சர்வீஸ்.. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் இந்த பிரதேசங்கள் பிரெஞ்சு காலனி பிரதேசங்கள்.

1954ல் பிரான்ஸ் ஆளுகை முடிவடைந்தாலும் 1962 ல் தான் ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் குடியுரிமை பெற்று வழிவழியாக அந்நாட்டில் பல்துறைகளிலும் பணி புரிந்து ஓய்வு பெற்று இங்கே செட்டில் ஆன குடும்பங்கள் அதிகம்.

இன்றும் புதுச்சேரி பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிரெஞ்சு விசா கிடைப்பது எளிது. பிரெஞ்சு சலுகைகள் உண்டு.

பிரெஞ்சு சர்வீஸ் முடித்தவர்களுக்கு கணிசமான ஓய்வூதியம் பிரான்ஸ் தருகிறது.

இங்கே தமிழகத்தில் தாத்தாக்கள் ₹ 30,000 பென்ஷன் வாங்கிய காலங்களில் புதுச்சேரி தாத்தா பாட்டிகள் ₹ 1 லட்சம் பெற்றார்கள்.

பார்க்குகளில் தாத்தாக்கள் அரை டவுசர் போட்டு் நண்பர்களுடன் இரும்பு கிரிக்கெட் பால் அளவு கோலி குண்டு உருட்டி விளையாடுவார்கள். அது ஒரு பிரெஞ்சு விளையாட்டு.

குடும்பமே திராட்சை சாறு சாப்பிடுவார்கள். இது தான் கந்தசாமி பின்ணணி.

கந்தசாமி விளக்கினார் "இந்தக் கருவி பெயர் மெண்ட்டோமீட்டர். ஜெர்மன் ராணுவத்திடம் இருந்து இரண்டாம் உலகப் போரில் என் தாத்தா கைப்பற்றியது. இதை தூரத்தில் வைத்து ஒருவரை ஃபோகஸ் செய்தால் போதும். அவர் மன உறுதி எத்தனை பாயிண்ட் எனக் காட்டும்" என்றார்.

குப்புசாமி முகத்தைக் காட்டியதும் ரீடிங் 45.543 என்று வந்தது. "சுமார் உறுதி நீங்க. ஆனால், உளவுத் துறைக்கு லாயக்கில்லை."

"இந்த வயசில் நான் ஏன்யா அந்தத் துறைக்குப் போறேன்?" என நினைத்துக் கொண்டார் குப்பு.

"மன உறுதி 80 க்கு மேல் இருந்தால் தான் எடுப்பாங்க. நீங்க ஒரு கோழை லிஸ்ட். "

"வாஸ்தவம். என் மன உறுதி ரொம்ப வீக். டி வியில் பேய் படம் கூட பார்க்க திராணியில்லை. கரெக்ட் சார்" ஒப்புக் கொண்டார்.

வீட்டில் குப்புசாமி மனைவி கமலா டி.வியில் பேய் அறிமுகமாகும் முதல் சீனைக் கை தட்டி வரவேற்று ரசிப்பாள்.

நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் கிங் கோப்ரா டாக்குமெண்டரி பார்த்து ரசிப்பாள். டி.வி திரையில் அதைத் தொட்டுப் பார்த்து, "ராஜ நாகம் ரொம்ப கூச்ச சுபாவம் உடையதாம்" என்றாள்.

தைரிய சாலி.

கமலா லேசா கண்ணைக் கசக்கினால் கூ்ட இவர் பொல பொலவென உதிர்ந்து போய் விடுவார். சரியாகப் பிடிக்காத தீபாவளி ரவா உருண்டை போல.

கந்தசாமி, "90 பாயிண்ட்டுக்கு மேல் இருப்பவங்களைத்தான் பாராசூட்டில் எதிரி நாட்டில் இறக்கி வேவு பார்க்க அனுப்புவோம். சிக்கினால் நகத்தில் ஊசி ஏத்தினாலும் உண்மை சொல்ல மாட்டாங்க".

குப்புசாமி நகம் இதைக் கேட்டு வலித்த மாதிரி ஒரு உணர்வு.

"அப்புறம் ஒரு இடத்தில் லைட்டரால் சுடுவாங்க..."

"சார் வேணாம் சார்.. நான் இதய பலகீனம் உள்ளவன். இதை எல்லாம் கேட்டால் இங்கேயே மயக்கம் வந்திடும். வீட்டுக்கு நீங்க தான் தூக்கிப் போகணும்."

"நான் சொல்ல வந்தது மூக்கு நுனி சார்... அது தான் மிகவும் மென்மையான பகுதி"

அப்புறம் எல்லையில் அவர் ஆப்பிரிக்க கலகப் படை எதிரியிடம் சிக்கி எப்படி தப்பித்து வந்தார் என்பதை விலாவரியாகச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அவங்க பேச்சிலர்ஸ் இல்ல!
Kamala and kuppusaami

கவனித்துக் கேட்டதில் இவருக்கு ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, உருது, ஆப்பிரிக்க மொழிகள் எதுவுமே சரியா வராது.. தெரியாது.. தமிழ் உட்பட.

பாஷை புரியாமல் விட்டிருக்கலாம் ஒரு வேளை.

ஒரு அஸைண்ட்மெண்ட்டில் எதிரியின் டாங்கி மேல் ஏறி அதன் நீண்ட குழாயில் தன் தொப்பியைத் திணித்து, வெடித்த குண்டு திரும்ப உள்ளேயே போய் வெடிக்க.. டாங்க் குழுவே காலியாம்.

ஐ.நா வீர தீர விருது தந்ததாகச் சொன்னார்.

அது மாதிரி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது குப்புசாமிக்கு.

பொதுவாக சம்ஸ்கிருதம் படித்த பண்டிதர்கள் வாய் சும்மா இருக்காதாம். யாரிடமாவது ஒரு சுலோகம் சொல்லி அர்த்தம், சொன்னபடி இருப்பார்களாம். இது வேலுக்குடியே சொன்னது.

அதே போல் தான் கந்தசாமி போன்ற ரிடையர்டு ஆட்களும். வீர வரலாறு படிப்பார்கள்.

இருட்டியதும் கர்னல் போய் விட்டார்.

"அடடே பெட்டியை மறந்து வச்சிட்டாரே. நாளை ஒப்படைப்போம்."

பெட்டி இருந்த பையை வீட்டுக்கு எடுத்துப் போனார் குப்புசாமி.

பார்க்க அக்காலத்து வெற்றிலைப் பெட்டி மாதிரி இருந்த அதை கமலா பார்த்து, " எதுக்கு இது... வெள்ளியில் வெத்தலைப் பெட்டி... ஏன் புதுசா இந்த கெட்ட பழக்கம். அப்புறம் புகையிலை போடுவீங்க.. என் பாட்டி இதைப் போட்டு போட்டு 107 வயசிலேயே போயிட்டாங்க" என்றாள்.

அதுக்கு மேல் வாழ்ந்தால் தான் பூரண ஆயுளோ.

"இல்லே கமலா.. இது ஒரு கருவி" எனக் கந்த சாமி சொன்ன விஷயங்களைச் சொன்னார்.

"எனக்கு எத்தனை காட்டுது.. பாருங்க,"

குப்புசாமி திறந்து ஆன் செய்து ஃபோகஸ் செய்ய ரீடிங் 98.45 காட்டியது.

இதையும் படியுங்கள்:
தொடர்கதை: கோதண்டராமன் ஆவி - அத்தியாயம் 1
Kamala and kuppusaami

"கமலா நீ பாஸ். பிரெஞ்சு ராணுவத்தில் சேர்த்துக் கொள்வார்கள்"

எதற்கும் பயப்படாத வீர மங்கை கமலா நாச்சியார். கிராமத்தில் வளர்ந்தவள். பாம்பைக் கூட பார்த்து பயந்ததில்லை.

படிக்கும் போது குச்சியால் தண்ணீர் பாம்பைத் தூக்கிப் போட்டிருக்கிறாள்.

"வீல்" என அலறினாள் கமலா.

காலடியில் ஒரு கரப்பு ஓடியது. திடீரென டேக் ஆஃப் செய்து பறந்து அவள் மேல் விழ.. துள்ளிக் குதித்து, தாவி, ஆடி, புடவையை உதறி....

"என்னா சும்மா நிக்கறீங்க அடிங்க அதை."

ஆம். கரப்பான் பூச்சிக்கு மட்டும் பயப்படுவாள் கமலா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com