சிறுகதை: கேட்பாரற்ற வெளிகள்!

நகரத்து கச்சேரி மேடையை விட்டு ஓடிய கிராமத்து புல்லாங்குழல் கலைஞனின் வாழ்க்கை தத்துவார்த்த மாற்றத்தையும் இயற்கையின் அழகையும் விவரிக்கிறது இந்தச் சிறுகதை!
சிறுகதை | A boy play flute
சிறுகதை | A boy play fluteImage credit: Gemini AI
கோவிந்த் மனோகர்

I am a retired Government Servant worked for Indian Audit and Accounts Department. Living in Chennai am Interested in Reading, Writing, Listening/Watching feel good movies, music especially old cartoons. I want to share my thoughts I get for living easily/peacefully irrespective of Age and environment. Be just to reach anywhere.

Updated on
Kalki Strip
Kalki Strip

அவர் ஒரு புல்லாங்குழல் விற்பன்னர். ஒரு ஓய்வு நாளில் தன் சொந்த கிராமத்திற்குச் சென்று இருக்கையில், அங்கு ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அற்புதமாக... ஆனால், சொந்தமாக அந்த வட்டாரப் பாடல் ஒன்றை புல்லாங்குழலில் வாசித்துக் கொண்டிருந்தான். மெய் மறந்து ரசித்த அவருக்கு அவனை நகரத்திற்கு அழைத்துச்சென்று வித்யாஅப்பியாசம் கொடுக்க வேண்டுமென்று விழைந்து, அவன் தாயிடம் சமாதானம் பேசி அழைத்து சென்றார்.

நகரில் தினசரி பழக்கங்களே கடினமாயிருந்தது அவனுக்கு. ஒருவழியாக அதற்கு தன்னைத் தகவமைத்துக்கொண்டான்.

பின்னர் இசை பயிற்சி.

அவனுக்கு மிகவும் பிடித்த விஷயமாகியதால் மிகச் சுலபமாக சடுதியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டான். உணவுப் பழக்கம் கொஞ்சம் இடறியது. பின்னொரு சுபநாளில் மார்கழி மாத இசையோற்சவம் நடக்கையில் அவனைத் தனிக் கச்சேரி நடந்த பகீரத ப்ரியர்த்தனம் செய்து ஒரு slot வாங்குகிறார். பழக ஓரிரு கச்சேரிகளுக்கு அழைத்து சென்றார். அவன் மேடையைவிட குழுமியிருந்தவர்களை அதிகம் கவனித்தான். இடைவேளையில் கான்டீன் கூட்டத்தையும் பார்த்தான். அவர்களின் சம்பாஷணைகளைக் கவனித்தான். கூச்சத்துடன் அவர் வாங்கி தந்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொண்டான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com