சிறுகதை: தர்மத்தின் சங்கடம்!

லஞ்சம் மற்றும் கூடுதல் விலைக்கு எதிராகப் போராடும் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவனின் சிறுகதை
சிறுகதை |  A old man is sitting
சிறுகதை | A old man is sittingImage credit: Gemini AI
ஆர்.சுந்தரராஜன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

காலை ஆறு மணிக்கே ராமநாதனின் வீட்டில் பித்தளை செம்பில் தண்ணீர் விழும் ஓசை கேட்டது.

ராமநாதன் ஒரு நேர்மையான அரசு ஊழியர். தந்தை அவருக்கு 'ராமநாதன்' என்று பெயர் வைத்தபோதே, அவருடைய குணத்தையும் தீர்மானித்துவிட்டார் போலும். தன் வாழ்நாளில் ஒரு பைசாகூட லஞ்சமாகப் பெற்றதில்லை. அலுவலகத்தில் அனைவரும் அவரை ‘விசித்திரப் பிறவி’ என்றுதான் அழைப்பார்கள்.

"அண்ணே, ஒரு நூறு ரூபாய் தூக்கிப் போட்டா பத்து நிமிஷத்துல வேலை முடியப் போகுது. இதுக்கு எதுக்கு மூன்று நாள் அலையணும்?" என்று கேட்கும் சக ஊழியர்களிடம், ராமநாதன் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவார்.

அன்று காலை செய்தித்தாளை விரித்தபோது, முதலமைச்சரின் அறிக்கை பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது: "தமிழகத்தில் லஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களும் பொதுமக்களும் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும்."

செய்தியைப் படித்த ராமநாதன் திருப்தியுடன் தலையசைத்தார்.

"பார்த்தாயா சுமித்ரா, அரசாங்கமே லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறார்கள். நாமும் நேர்மையாக இருந்தால் இந்த நாடு சீக்கிரமே மாறிவிடும்," என்றார் தன் மனைவியிடம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com