

கோபால்சாமி புலம்பிக்கொண்டிருந்தார். “ஒரு வருஷம் ஆச்சு, ஐந்து ரூபாய் மறுநாள் தருவதாக சொன்னான். பாவி கொடுக்காமல் போய்விட்டான்!” என்று கூறிக்கொண்டு குருக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
இந்த சமயம் வாசல் கதவை யாரொ தட்டினார்கள். காமு சென்று பார்த்தாள். கதவைத் திறந்ததும் அவள் பயந்து போனாள். வீல் என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடினாள். இவள் அலரல் கேட்டு ஒடிவந்த கோபால்சாமியிடம் "உங்க பிரண்டு கோதண்டராமன் வந்திருக்கார்" என்று சொல்லிவிட்டு தன் அரைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
“எனக்குத் தெரியும், கொதண்டராமன் வருவான் என்று” என்று சொல்லிக்கொண்டேவாசலுக்குச்சென்றார். அங்கே ஒரு பெட்டியுடன் அந்த கோதண்டராமன் நின்று கொண்டிருந்தார்.
“வாப்பா , உள்ளே வா” என்று அழைத்தார் கோபால்சாமி.
“இல்லே சார், எனக்கு வேலை அதிகம் இருக்கு. இந்தாங்க உங்க ஐந்து ரூபாய். அப்புறம் நேரம் கிடைத்தால் பார்ப்போம்” என்று, தான் வந்த ஆட்டோவில் ஏறிச்சென்றூவிட்டார் அந்த கோதண்டராமன்.
'இது என்ன சார் கீர்னு சொல்றான்? இது கோதண்டராமன்தானா? அல்லது காமு பயந்தது போல் அவன் ஆவியா? அப்படியானால் இந்த ஐந்து ரூபாய்? ஆவி பில்லி சூன்யம் எங்கிறார்களே! அது போல ஏதாவது இருக்குமோ?' - கோபால்சாமிக்கும் பயம் பற்றிகொண்டது கதவை தாளிட்டுகொண்டு உள்ளே போய்விட்டார்.