
சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே எப்போதும் கொழுக்கட்டை கிடைக்கும். ஒன்று டி.நகர், ஆழ்வார் திருநகர், வடபழனி என்று.
கோபால் நடுத்தர வர்க்கம். அப்பா எல்.ஐ.சி.யில் வேலை பார்க்கிறார். அம்மா வீட்டில்தான். கோபால் கேட்டரிங் கோர்ஸ் முடித்துவிட்டார்.
அவருக்கு வேலைக்கு செல்ல மனம் இல்லை. தானே ஏதாவது தொழில் துவங்க ஆசை. பிரியம். எல்லாம்.
தனது மூளையை கசக்கி பிழிந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தார். அவர் படித்தது கேட்டரீங்தான். எனவே, அது சம்பந்தமாக தொழில் துவங்க விரும்பினார். அவர் தமிழருக்கு கொழுக்கட்டை என்றால் ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். இனிப்பு கொழுக்கட்டை மற்றும் உப்பு கொழுக்கட்டை இரண்டுமே மக்களுக்கு பிடிக்கும். வீட்டில் செய்வது என்றால் வேலை அதிகம். எனவே, தானே ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார்.
கடை ஆரம்பிக்க ₹50,000 தேவை. அப்பாவிடம் கேட்டார். அப்பா தன்னிடத்தில் அவ்வளவு பணம் இல்லை. வேண்டும் என்றால் கடன் வாங்கித் தருகிறேன். ஆனால், மாசம் தவறாமல் வட்டி கட்ட வேண்டும் என்றார்.
கோபால் ஒப்புக்கொண்டார். ஆழ்வார் திருநகரிலேயே ஒரு இடம் பார்த்தார். மெயின் ரோட்டிலேயே இருந்தது. வாடகை ₹7000. அட்வான்ஸ் ₹25000. கோபால் புக் செய்துவிட்டார். ஒரு பெண்ணை காசாளராக நியமித்தார்.
கொழுக்கட்டை மட்டுமே அங்கு கிடைக்கும். அதை செய்ய தற்போது தாமே செய்யலாம் என்று கோபால் முடிவு எடுத்தார்.
அடுத்த வாரம் பிள்ளையார் சதுர்த்தி. அன்றே கடையை திறக்க முடிவு செய்தார். ஒரு சமையல் காரரையும் தமக்கு உதவிக்கு வைத்து கொண்டார்.
துவக்க நாள். வினாயக சதுர்த்தி. எல்லோருக்கும் அன்பளிப்பாக ஒரு இனிப்பு கொழுக்கட்டை மற்றும் ஒரு உப்பு கொழுக்கட்டை இலவசமாக கொடுத்தார்.
இரண்டாம் நாள் நல்ல பிசினஸ். போக போக கொழுக்கட்டை கடை பிரபலம் ஆனது. நல்ல வியாபாரம்.
கடையில் கூட்டம் வருவதால் 2 சிப்பந்திகளை வேலைக்கு அமர்த்தினார். நல்ல சம்பளம் கொடுத்தார். தனது கடனை ₹ 50,000 திருப்பி அப்பாவிடம் கொடுத்தார். அப்பாவிற்கு மிக்க மகிழ்ச்சி.
கோபால் சதா நேரமும் பிசினஸ் பற்றி மட்டுமே யோசித்தார்.
கடைக்கு வெளியே ஒரு டேபிள் மற்றும் 4 சேர் போட இடம் இருந்தது. நிறையப் பேர் உட்கார்ந்து சாப்பிட விரும்புவார்கள். எனவே ஒரு குடை ஷேமினா வாங்கி ஒரு மேசையும் நான்கு நாற்காலியும் போட்டார்.
கோபால் நினைத்த மாதிரியே நல்ல கூட்டம் வந்தது.
ஒரு சிப்பந்தி டோர் டெலிவரி செய்ய வேலைக்கு எடுத்தார். ஆம். டூ வீலர் உள்ளவரைத்தான் சேர்த்துக்கொண்டார். டோர் டெலிவரி செய்ய வாய்ப்புகள் அதிகம் வந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. லாப நஷ்ட கணக்கு போட்டு பார்த்தார்.
அம்மா..!
அப்பா..!!
கிட்டத்தட்ட ₹1 லட்சம் லாபமாக வந்து இருந்தது.
அம்மா அப்பா கோபாலை கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். ஆனால், கோபால் இன்னும் 2 வருடத்திற்கு திருமணம் இல்லை. பிசினசை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார்.
இப்போது முழு நேர சமையல் கலைஞர் இருந்தார். காலையில் சமோசாவும் மாலையில் போண்டா, மிளகாய் பஜ்ஜி, வடை, பக்கோடா என தூள் கிளப்பினார்.
வியாபாரம் அமோகமாக நடந்தது.
இதுவரை கடைக்கு பேர் வைக்கவில்லை. அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வந்தது. கோபால் ரொம்ப யோசித்தார். கடைசியாக ஒரு பேரை நிச்சயம் செய்தார். புது பலகை வந்தது.
ஆம். தும்பிக்கை ஸ்நேக்ஸ்..!
இனி வியாபாரம் தூள் பறக்கும்…!!