

காட்சி 1
சோமு: வாங்க... வாங்க... கண்மணி யார் வந்திருக்கா பாரு?
கண்மணி: வாங்க. என்னங்க பக்கத்து வீட்டில நீங்க இருந்த போது ரொம்ப உதவியா இருந்தீங்க. அக்கா தங்கச்சியா இருந்தோம். ஒரு நாள் கூட முகத்தை சுழிக்காமல் பேசினோம், பழகினோம். இப்ப சொந்த வீடு கட்டிக்கிட்டு எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டீங்க. நாங்களெல்லாம் தனியாகிட்டோம்.
மகாலஷ்மி: நல்லாயிருக்கீங்களா? பையன், பெண்ணெல்லாம் சொளக்கியமா?
சோமு: எல்லோரும் நலம் உங்க வீட்டிலே எல்லோரும் நலமா?
கண்மணி: உட்காருங்க என்ன சாப்பிடறீங்க?
மகாலஷ்மி: உங்களோட பேசினதே பாயசம் சாப்பிட்ட மாதிரி இருக்கு.
கண்மணி: அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஏதாவது சாப்பிட்டே ஆகனும். இந்தாங்க ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்க. லஞ்ச்சும் இங்கே தான் உங்களுக்கு.
மகாலஷ்மி: ரொம்ப அன்புத்தொல்லை பண்றீங்க...
சோமு: ஆமா உங்க கணவர் ரமணி வரலையா?
கண்மணி: ஏங்க அவரை விட்டுட்டு வந்தீங்க? என்னோட திக் ஃப்ரண்டுங்க அவரு.
மகாலஷ்மி: அவரு மகள் கலாவை பார்க்க அமெரிக்கா போயிருக்காரு. வர மூணு மாசமாகும்.
சோமு: ஓ! உங்க வீட்டிலே மூணு பேர் வெளிநாட்டிலே ஒர்க் பண்றாங்கதானே?
மகாலஷ்மி: நல்லா ஞாபகம் வைச்சுருக்கீங்களே. மூத்த மகன் ரவி அமரிக்காவில் டாக்டரா இருக்கான். மகள் கலா ஐடியில் இருக்கா? சின்னவன் சீனு ஜெர்மனியில டாக்டர்.
கண்மணி: அப்ப புருஷணும் பெண்டாட்டியும் தனியா ஜாலியா இருக்கீங்க போல.
மகாலஷ்மி: அட நீங்க ஒண்ணு கடைசி பெண் ரமா இங்கேதான் டாக்டரா இருக்கா வருமானம் சரியா இல்லை.
கண்மணி: சரி என்ன விஷயமா வந்தீங்க?
மகாலஷ்மி: நல்ல விஷயம் தான். உங்க மூத்த பெண் பாருவை என் மூத்த பையனுக்கு பாக்கலாமுனு எண்ணம். ஜாதகம் கூட கொண்டு வந்திருக்கேன்.
கண்மணி: என்னங்க...
சோமு: ஜாதகத்தை தரோம். ஆனா இப்ப அவளுக்கு கல்யாணம் பண்றதா இல்லை.
மகாலஷ்மி: ஏங்க பாருவுக்கு வயசாடிச்சில்லே. ஒண்ணும் கவலைப்படாதீங்க கல்யாண செலவை நாங்க பாத்துக்கறோம்.
சோமு: அவ மேலே படிக்கற ஐடியாவிலிருக்கா...
மகாலஷ்மி: கல்யாணம் பண்ணிகிட்டு படிக்கட்டுமே!
சோமு: நான் பாருவிடம் பேசிப்பார்க்கிறேன்.
மகாலஷ்மி: சரி பேசிட்டு நல்ல சேதியா சொல்லுங்க. நான் கிளம்பறேன்.
சோமு: சரிங்க.
காட்சி 2
சோமு: மகாலஷ்மி அம்மா சும்மா தான் வந்திருக்காங்கனு பார்த்தா எதோ ஒரு ப்ளானோடு தான் வந்திருக்கா.
கண்மணி: அதானே. என்னதான் க்ளோஸா பழகினாலும் சம்பந்தம் செய்ய மனசு கேட்கலை. அது தவிர அவன் நல்ல பையன் இல்லை.
சோமு: மகாலஷ்மி வந்தா ஜாதகம் சரியில்லைனு கழட்டி விட்டுடுவோம்.
கண்மணி: அவ எமகாதகி ஜாதகம் பாத்துட்டு தான் வருவா. அவளே ஒரு ஜோஸியர். என்ன கோளாறுனு சண்டைக்கு வருவா?
சோமு: நம்ப பெண் லவ் பண்றா அவ ஆசைப்படியே தான் செய்வோம்னு சொல்வோம்.
கண்மணி: அது தான் சரி நம்ம மக பாருவே வரா...
பாரு: அம்மா ஒரு விஷயம் சொல்லணும்...
கண்மணி: அதுக்கு முன்னாடி நாங்க ஒரு விஷயம் சொல்றோம். நீ ஒரு பையனை லவ் பண்றே...
பாரு: அம்மா...
சோமு: மகாலஷ்மி உன்னை பெண் கேட்டு இங்கே வந்தாங்க. நீ ஒரு பையனை லவ் பண்றேனு சொல்லப்போறோம்.
பாரு: அதையே தான் நானும் சொல்ல வந்தேன். நான் ஒரு பையனை லவ் பண்றேன்.
சோமு: என்ன சொல்றே நீ?
கண்மணி: அதான் சொல்லிட்டாளே!
சோமு: லவ்வெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரியா வராது.
கண்மணி: ரொம்ப கண்டிக்காம விட்டுட்டோம் உன்னை. அதனால் தான் இப்படி காதல்னு பெத்தவங்களிடமே பேசறே!
சோமு: எல்லாம் வயசுக்கோளாறு. சரி பண்ணிடலாம். ஒரு பொய் சொல்லப்போறோம்னு சொன்னவுடனே அதே உண்மையா வந்து நிக்குது.
பாரு: ஃபோனடிக்குது எடுங்க!
கண்மணி: சொல்லுங்க மகாலஷ்மி, இப்ப தான் வந்துட்டு போனீங்க. அதுக்குள்ளே...
மகாலஷ்மி: ஏன் பேசக்கூடாதா?
கண்மணி: ஐயோ அதில்ல. மேட்டரில்லாமல் நீங்க பேசமாட்டீங்க... சொல்லுங்க
மகாலஷ்மி: உங்க பெண் பாருவின் போட்டோ இருந்தால் ஒண்ணு கொடுங்க.
கண்மணி: எதுக்கு?
மகாலஷ்மி: உம், சினிமா எடுக்கப்போறேன். கேட்கறா பாரு... என் மகன் ரமணிக்கு அனுப்பி பிடிச்சிருக்கானு கேட்கத்தான்.
கண்மணி: இந்த மேட்டரில் கொஞ்சம் மெல்ல போவோமே...
மகாலஷ்மி: எதுக்கு?
கண்மணி: ஆமாங்க பணம் வேண்டாமா?
மகாலஷ்மி: கல்யாணச் செலவை நானே பண்றேன். கையை வீசிட்டு வாங்க கல்யாணத்துக்கு.
கண்மணி: நானே சொல்லக்கூடாது. என் பெண் இன்னொரு பையனை லவ் பண்றா...
மகாலஷ்மி: நிஜமாவா? அப்ப சரி ஃபோனை வைக்கறேன்.
காட்சி 3
சோமு: கண்மணி வா இப்படி. யார் வந்திருக்கா பாரு...
கண்மணி: அட நம்ம வேலுச்சாமி அண்ணன் மகாலஷ்மியோட அண்ணன். வாங்கண்ணே.
சோமு: காபியா? டீயா?
வேலுச்சாமி: என்ன சோமு? உன் பெண்ணை மகாலஷ்மியோட பிள்ளைக்கு கட்டித்தர மாட்டேனு சொல்லிட்டியாமே.
சோமு: என் பெண் இன்னொரு பையனை லவ் பண்றா!
வேலுச்சாமி: சரி லவ் மேரேஜ் உனக்கு ஓகேயா?
சோமு: இல்லைதான். ஆனால்...
வேலுச்சாமி: ஆனால் என்னப்பா?
சோமு: அவ காதலிக்காவிட்டாலும் நிச்சயமா அயல் நாட்டில் வேலை பாக்கற பையனுக்கு என் பெண்ணை தர மாட்டேன்.
வேலுச்சாமி: ஏம்பா? உன் பெண் சந்தோஷமா வாழப்போறது பிடிக்கலையா?
சோமு: அது தான் பிடிக்கும். ஆனால் மேட்டரே வேற...
வேலுச்சாமி: என்னப்பா?
சோமு: நம்ம நாட்டிலே படிச்சு, நம்ம மின்சரம், உணவு, தண்ணீர், கல்விக்கடன் மற்றும் ஸ்காலர்ஷீப் எல்லாம் யூஸ் பண்ணி டாக்டர், என்ஜினியராகி தன் திறமையை எல்லாம் அயல்நாட்டிற்கு பயன்படுத்தினால் அது நம்ம நாட்டிற்கு செய்யும் துரோகம் மாதிரி தானே. அதைநாம ஊக்குவிக்கலாமா?
இந்த கதையை படிக்கும் உங்க கருத்து என்ன வாசகர்களே? சோமு சொன்னது சரிதானா?