சிறுகதை: மோசடி!

2 Men
2 MenAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

கம்பெனிக்கு உள்ளே வந்ததுமே கேட்ட ஒரு துக்கச்செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. தேவராஜின் மரணச்செய்திதான் அது. அதிக பட்சம் அவனுக்கு 40 வயசு தான் இருக்கும். லோன் செக்சனில் கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவ் ஆக இருக்கிறான், சாரி இருந்தான்.

பதட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேனேஜர் சர்க்குலர் அனுப்பினார், 'இன்று மாலை 6 மணிக்கு மீட்டிங்' என்று.

எங்கள் கம்பெனி ஒரு பிரைவேட் பேங்க் உடன் டை அப் வைத்துக்கொண்ட பிரைவேட் ஃபைனான்ஸ் கம்பெனி. நான் கலெக்சன் டிபார்ட்மெண்ட்டில் டீம் லீடர். லோன் செக்சனில் எனக்குக்கீழ் பணி ஆற்றும் 8 கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவில் ஒருவன் தான் தேவராஜ். அவனுடைய பர்சனல் விபரங்கள் அதிகம் தெரியாது. வேலையில் பக்கா, கஸ்டமர்களிடம் நடந்து கொள்வதிலும் சரி, ஹையர் ஆஃபீசர்களிடம் ஒபீடியன்சிலும் சரி பர்ஃபெக்ட் ஆன ஆள்.

மாலை 6. மீட்டிங்கில் கம்பெனியின் முக்கியமான ஸ்டாஃப்கள் கூடினார்கள். மேனேஜர் பேச ஆரம்பித்தார். "தேவராஜ் திடீர்னு இறந்த செய்தி எல்லாரும் கேட்டிருப்பீங்க. நாளை காலை அடக்கம் பண்றாங்க. அவர் நம்ம கம்பெனில ஜாய்ன் பண்ணி ஆறு மாசம் தான் ஆகுது, ஆஃப் ரோல் தான். பர்மணெண்ட் ஆகலை. நம்ம கம்பெனி ரூல்ஸ் படி 2 வருசம் ஒர்க் பண்ணி பின் எக்சாம்ல பாஸ் ஆனாதான் ஆன் ரோல் ஸ்டாஃப் ஆகமுடியும். பர்மணண்ட் ஸ்டாஃப் ஆகிட்டா கிடைக்கற சலுகைகள், வசதிகள் இப்போ கிடைக்காது, அது உங்களுக்கே தெரியும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com