சிறுகதை: பகைவனுக்கு அருள்வாய்!

ஒருவர் நமக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று தீர்க்கமாக நம்பும் முன், அதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய வேண்டும் என்பதை இந்த சிறுகதை உணர்த்துகிறது.
Tamil Short Story | Marriage
Tamil Short Story | MarriageAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

பக்கத்து வீட்டில் இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் மகளுக்கு திருமணம். எனவே வீடு விருந்தினர்களின் வருகையால் கலகலப்பாக இருந்தது. வடிவழகி பக்கத்து வீட்டு முகப்பில் எரியும் அலங்கார விளக்குகளை பார்த்தாள். நானு சுந்தரா எல்லாம் ஒண்ணு மண்ணா இருந்தவங்க தான் காலக்கொடுமையால இப்போ இப்படி கிடக்கோம். அண்ணனும் தங்கையும் சுமுகமா இருந்தா நானும் இப்போ அங்க தான் ஏதாவது ஒரு வேலை செய்துக்கிட்டு இருப்பேன் என்று தோன்றிய எண்ணம் அவளை பத்து வருடங்கள் பின்னோக்கி இழுத்தது.

வடிவழகியின் கணவன் பழனியின் அம்மா அவன் தங்கை சுந்தராவை பிரசவித்த பின் வந்த இணை நோயால் இயற்கை எய்தினார். சிறுவயதில் பழனி கைக்குழந்தையான சுந்தராவை எப்போதும் சுமந்த வண்ணமாகவே இருப்பான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com