சிறுகதை: 25 மணிநேரம்!

பூமியின் சுழற்சி வேகத்தால் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுமா? வேலைச்சுமை, வானொலி குரல்கள் மற்றும் குடும்ப நேரத்தின் நிஜ அர்த்தத்தை அலசும் சிறுகதை.
சிறுகதை | Work life balance
சிறுகதை | Work life balanceImage credit: Chatgpt
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on: 
Kalki Strip
Kalki Strip

'விரைவு' வார்த்தை, வாழ்கையின் பல நிலைகளை பல பரிமாணங்களில், பல மாற்றுப் பெயர்களில் பங்கு எடுத்துக்கொள்கிறது. 'துரிதம்', 'பாஸ்ட்' எனப் பேருந்து, உணவு, அஞ்சல் தொடங்கி, ‘பரபரப்பையே’ பரபரப்பாய் மாற்றிவிட்டிருக்கிறது.

பூமியின் சுழல் வேகத்தில் மாற்றம் இருப்பதால், 'ஒரு நாளின் நேரம், 25 மணிநேரமாக  மாற்றியமைக்கப்பட வாய்ப்பு' என, உலக அறிவியல் அறிஞர்களின் இரு நாட்கள் கலந்தாலோசனை மாநாடு ஜெனிவாவில் புது அறிவிப்புடன் தொடங்கியிருந்தது.

மாநாட்டின் முடிவு அனைவருக்கும் விரைவாக வரும் என அறிவிப்பு வர, பதற்றம் மேலும் பற்றிக்கொண்டது. 

சர்வதேச ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு ஊகத்தைப் பரப்பத் தொடங்கியது.

"டேய் மச்சி, என்னடா நமக்கு இந்த 24 மணி நேரம் பத்தலைன்னு  கவலைப்பட்டது கடவுளுக்குக்கூட கேட்டுருச்சா? இனி, 25 மணி நேரம்னு மாத்தப்போறாங்களாமே?!.."

"ஆமாடா மச்சி. யப்பாடா. கூட, ஒரே ஒரு மணி நேரம் கிடைச்சா போதும்டா. என்னோட ப்ராஜெக்ட் வொர்க்ஹெட், டீம் லீடரைச் சமாளிச்சிடலாம். எப்பப் பார்த்தாலும் 'நொய், நொய்'ன்னு பிடுங்கல்டா."

Loading content, please wait...