
சபரிஷ் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை. முதல் பெண் குழந்தை வித்யா. இப்போது வித்யா ஆராய்ச்சி முடித்து டாக்டரேட் வாங்கிவிட்டார். கல்யாணம், வேலைக்கு பின்னர்தான் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டார்.
சபரிஷ் தனது இயற்பியல் பட்ட படிப்பை மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் முடித்துவிட்டு அங்கேயே எம்.எஸ்.சி. படித்தார்.
முதுகலை இரண்டாம் (கடைசி) வருடம். சபரிஷ் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். காலை 4 மணிக்கு எழுந்து 6.30 மணி வரை படிப்பார். மாலை 6 முதல் 9 மணி வரை படிப்பார். ஒரு குறிக்கோள் உடன் இருந்தார்.
முதுகலை இயற்பியல் பரீட்சை முடிவுகள் வெளியாயின.
அம்மம்மா..! அப்பப்பா..!
சபரிஷ் மாநிலத்தில் முதல் மாணவனாக வந்து தங்க பதக்கம் வென்றார்.
இனி என்ன?
ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆம். பி.எச்.டி. வாங்க வேண்டும்.
வெளிநாடுகளில் ஆராய்ச்சி பண்ணவா…? அல்லது தமிழ்நாட்டிலியே செய்வதா என முடிவு எடுக்கமுடியாமல் இருந்தார்.
அப்போது சபரிஷ் சித்தப்பா ஒரு ஐடியா தந்தார். இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்ஸ், அதாவது கணக்கியல் இந்திய நிறுவனம்… அதில் வேலை வாங்கி நீ அங்கேயே ஆராய்ச்சி செய்யலாம் என்று யோசனை சொன்னார்.
சபரிஷுக்கு இது நல்ல யோசனையாகப் பட்டது.
மறு நாள்.
சபரிஷ் ஐ.ஐ.எம்.க்கு சென்றார். அவர் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவர். அவர் இயக்குனரை சந்தித்து தன் நிலைமையை விளக்கினார்.
“அவுட் ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்..!” என்று சொல்லிவிட்டு…
“எதில் ஆராய்ச்சி பண்ண உத்தேசம்…?” எனக் கேட்டார்.
“சார் 2 விஷயங்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன்.
1. டார்க் மேட்டர்
2. பிபோனசி சீரிஸ்."
“ஆமாம் டார்க் மேட்டர் இயற்பியல்… ஆனால் பிபோனசி சீரிஸ் கணக்கு ஆயிற்றே…?”
“சார் இயற்பியல், வானவியல் இரண்டிலும் பிபோனசி சீரிஸ் இடம் பெற்றுள்ளது… அதான்..?”
“வேலை செய்து கொண்டே ஆராய்ச்சி செய்ய முடியுமா…?”
“எஸ். சார். நிச்சயமாக முடியும்…!”
“சரி… இப்போது ஆராய்ச்சி செய்யும் ஒருவருக்கு அசோஷியேட் ஆராய்ச்சியாளராக வேலை செய்ய வேண்டும். முடியுமா…?”
“எஸ். நிச்சயமாக சார்…!”
“உதவி தொகை ₹25,000…? இது போதுமா…?”
“போதும் சார்… இன்னொரு விஷயம் சார்… நான் இங்கே பணி புரிந்தால்… ஒரு சின்ன வீடோ, ரூமோ பார்த்து தங்கி விடுவேன். ஆராய்ச்சி முடியும் வரை இங்கேயே இருப்பேன்.
“குட். உங்கள் யோசனை சரியானது. ஆம். பஸ்சில் வந்துபோகவே 2 அல்லது 3 மணி நேரம் ஆகிவிடும்… !”
“எஸ். சார். அந்த நேரத்தில் படிக்கலாம் அல்லவா… ? அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன்.”
“சரி. எப்போ ஜாயின் பண்ணுவீங்க…?”
“நாளை என்றாலும் ஓகே…!”
“குட்… நாளை மறுநாள் வாருங்கள். டியுட்டியில் சேருங்கள்... அப்புறம்… நீங்கள் தனி வீடு, ரூம் எல்லாம் பார்க்கவேண்டாம். எங்களிடம் டாய்லெட், மின் விசிறியுடைய ஒரு ரூம் இருக்கு. நீங்கள் அங்கேயே தங்கலாம். வாடகை எல்லாம் இல்லை…!”
“ரொம்ப நன்றி சார்… யூ ஆர் சோ கைண்ட் சார்…!”
“சரி.. நான் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு வந்தால் போதுமா சார்…?”
“எஸ். ஆல் தி பெஸ்ட்…!”
“தேங்க் யூ சார்…!”
சபரிஷ் சந்தோஷமாக கிளம்பினான். ஆம் இந்த கணக்கியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே உள்ளது… ?
சிறுச்சேரி..!