சிறுகதை: மக்களை ஆளும் அரசு(சர்)கள்!

இயற்கையின் நீதி பற்றி மகனுக்கு எழுந்த சந்தேகத்திற்கு தந்தை உதாரணத்துடன் புரியவைக்கும் அர்த்தமுள்ள சிறுகதை.
Tamil shorty Story
father and sonAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

‘ஏம்பா! நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் ஒரு பெரிய எருமை மாடு, அதை 10 சிங்கங்கள் போராடி உண்ணுகிறதே? இதைப் பார்க்கும் போது பயம்மா இருக்கிறது. சிங்கம் ரொம்ப மோசம்பா!? சரிதானே.’

ஏழு வயது பையன் கேள்விக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.

அதற்காக “யூடியூப்” சேனலில், ‘prey vs Predator’-ஐ search செய்து எடுத்து என் மகனை முழுவதுமாக பார்க்கச் சொன்னேன்.

அதில் அங்குளம் அங்குளமாக ஆங்கிலத்தில் சதுப்புநிலம், மழை வருகை, அடர்ந்த புல்வெளிகள், பசுமையின் வரவு, எருமைகளின் அணி வகுப்பு, அவைகளின் மேய்தல் என பின்னோட்டமாக தமிழில் ஒலிநாட ஓடிக்கொண்டு இருந்தது.

திடீரென்று ஒரு பீடுகை, எறுமைகளின் பதற்றம், திக்குத் தெரியாமல் சிதறிய காட்சிகள் என்று ஓடிக்கொண்டு இருந்தது.

அதில் ஒரு எருமை தனியாக மாட்டிக்கொள்ள, அதனை மற்ற சிங்கங்கள் கூட்டம் உண்டு உணவாக கொண்டது.

என் கேள்விக்கு இப்போது என் மகன் பதில் கூற ஆரம்பித்தான்,

சிங்கம் எத்தனை - 7 to 10,

எருமை 40 to 50,

அப்போ எது ஜெயிக்கும்;

எருமை - ஏன் ஜெயிக்கவில்லை?

அது ஓடுகிறது; பயப்படுகிறது.

எதற்காக - உயிருக்காக,

ஏன் பயப்பட வேண்டும்?

சிங்கத்தின் பற்கள் ‘கூர்மையாக இருக்கும்’ கிழித்து விடும்.

அப்படியா? எருமைக்கு ஒன்றும் இல்லையா?

என்ன இல்லை: இதோ பார்!

கூர்மையான கொம்புகள், முட்டி உதைத்தால் தாங்கக் கூடிய பரந்த நெற்றிகள்;

இருந்தாலும் 5-ல் 1-முறை சிங்கம் ஜெயிக்கிறது.

அப்படி ஜெயிக்கவில்லை என்றால், சிங்கம் இறந்துவிடும். இல்லாமலே போய்விடும்.

அய்யோ பாவம் சிங்கம்!

ஆக அது உணவாகச் சாப்பிடுகிறது. “வேட்டை” என்பது விளையாட்டு அல்ல, அப்படியா! சிந்தித்தான் - என் பையன்.

இது இயற்கையின் நீதி.

“எருமைகள் ஒன்றாக மேயும்; அதைப் பிரித்து பந்தாட சிங்கம் சூழ்ச்சி செய்யும்.”

“சூழ்ச்சி சில சமயம் பலிக்கும்.” இப்படியாக நான் சொல்லிக் கொண்டு போக,

எதிரே, செய்தியில் ரஷ்ய உக்ரைன் போரில் இறந்தவர்களின் சடலங்கள் தெரு வீதியில் கேட்பார் அற்று கிடப்பதையும் பார்த்தான்.

அப்ப இது:-

மனிதர்கள், விசித்திரமானவர்கள்; இயற்கையை மீறுபவர்கள். மீறித்தான் பார்ப்போம் என்று சூளுரைப்பார்கள்.

இப்படித்தான் அரசர்கள், அரசுகள் தங்களை சிங்கங்களாக நினைத்து மக்களை ஆளுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பெண் மனம்!
Tamil shorty Story

அய்யோ பாவம் என்றான் என் பையன் - ஆமாம் என்றேன் நான்.

அடுத்து வருவது,

சீன - தைவான் போர்மேகம்.

“கட்” செய்தேன் நான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com