

கல்லூரி காலங்கள் முடிந்து கல்யாண காலங்கள் வந்து, குடும்ப சகிதமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிகாலை 6:30 மணி... அலை பேசி அழைத்தது.... "சதீஷ் தம்பியா? எப்படி இருக்க? sorry-ப்பா?! காலையில உன்னை disturb பண்றேன்! கேட்பதற்கு ரொம்ப கூச்சமா இருக்கு? இருந்தாலும் பரவாயில்லை! உன்னிடம் தனியாக பேச வேண்டும்.... ஞாயிற்றுக்கிழமை இன்று; உன்னுடைய leisure time; அதை நான் எடுத்துக் கொள்ள முயற்சிப்பதற்கு என்னை மன்னித்துவிடு!"
எனக்கு ஒன்றும் புரியவில்லை! டாக்டர் நந்தகுமாரா? என்ன ஆச்சு அவருக்கு? ஏன் இப்படி பேசுகிறார்? என்னைப் பேசவிடாமல் இவர் தொடர்ந்து பேசுவதற்கு என்ன காரணம்? அதுவும் அவர் என்னிடம் பேசி 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது; இதையெல்லாம் நான் யோசிப்பதற்குள் அவரே அலைபேசியை துண்டித்து விட்டார்.
'நான் அவரைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை; எனக்கு அது கொஞ்சம் மனம் வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் திரும்ப அழைக்கலாமா? அவருக்கு என்ன அவசரமோ? தெரியவில்லை; இப்படியாக என் யோசனை சென்று கொண்டிருந்தது'.