மாறனின் தாடி ... தாடி வளர்ப்பதன் தத்துவம்!

தாடி வளர்ப்பது என்பது வெறும் முகத்தில் வளரும் முடி மட்டுமல்ல; அது ஒரு தத்துவம் என்பதை இந்த உரையாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
Beard
Beard
Updated on
Kalki Strip
Kalki Strip

என் நண்பன் மாறன் சமீபகாலமாக தாடி வளர்த்துக் கொண்டு வருகிறான்.

எப்போதுமே நமக்கு ஒரு சுவாரஸ்யம் தேவைப்படுகிறது.

அது நண்பனிடம் இருந்தால் மேலும் கூடுகிறது.

ஏதோ விசேஷம் என்று எண்ணத் தோன்றுகிறது.

“தாடி ஏன் வளர்க்கிற?”

“சும்மாதான்”!!

“சும்மாதான் என்றால்?”

“சும்மா வளர்த்து பார்ப்பது என்பதுதான்” ...

“அப்ப அது ஒரு சுமையா தெரியலையா ?”

“அப்படி நினைச்சாதானே” ...

“இருந்தாலும் நினைக்காம இருக்க முடியாதே” ....

“ஏன் நினைக்கணும்?”

“சும்மா அதை தடவி கொடுத்துக் கொண்டே இருக்கணும்...."

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்.”

ஆமாம் !! ஆமாம் !!!

நம்மை அசுவாசப்படுத்திக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது தாடியாக இருந்துட்டு போகட்டும்.

ஆஹா !!

"மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்" படித்திருக்கிறேன்”...

தாடி மூலம் ஒரு "ரிலாக்ஸ்" வந்தால் எவ்வளவு பெரிய விஷயம்.

மனதினுடைய மார்க்கம் அல்லவா தாடி ?

“நானும் வளர்க்கலாம் என்று இருக்கிறேன்!”

“வளர்த்துப் பார்!"

“என்ன தெரியும் நண்பா?”

“அது 'இருப்பதே' தெரியாமல் போகும்”..

“அப்படிபோனால்”....

“அதுதான் நம்மை "இருத்தலில்" இருந்து "இல்லாததை" தேடி அலையும் மனதை கட்டுப்படுத்தும் ஒரு விசேஷ திறவுகோல்”.

எது என்னவோ பா; என்னைப் பொறுத்தவரையில், இந்த தாடி என்பது பலருக்கு பலவிதமாக காட்சியளிக்கிறது ...

சிலருக்கு அதன் மூலம் ஒரு மவுசு கிடைக்கிறது..

சிலருக்கு அடையாள சின்னமாக மாறுகிறது..

பலருக்கு மார்க்கத்தின் உடைய வழியாக காணப்படுகிறது ..

பெரும்பாலும் மரியாதையை சமுதாயத்தில் ஏற்படுத்திக் கொடுக்கிறது..

தாடியை பல பேர் பல விஷயத்திற்கு வளர்க்கிறார்கள்.

கல்யாணம் ஆவதற்கு;

கருமாதி முடிவதற்கு;

கல்யாணம் ஆகி குழந்தை பிறப்பதற்கு;

குழந்தை நன்றாக படித்து தேர்ச்சி பெறுவதற்கு;

பிறகு வேலை வாய்ப்பு; கல்யாணம்;

இத்யாதி; இத்யாதி...

தாடி ஒருவருக்கு ஆன்மீக அந்தஸ்தை கொடுக்கிறது.

சிலருக்கு பக்தியின் வடிவமாக காட்சியளிக்கிறது..

இதையும் படியுங்கள்:
ஆண்களின் அழகை கூட்டும் அடர்த்தியான தாடி!
Beard

மாணவச் செல்வங்களுக்கு இது ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட்..

ஆனால், தாடி வளர்ப்பதில் ஒரே ஒரு நன்மை

நம்மை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கிறது .

நம்மால் முடியாதது தாடியால் முடிந்தால் சரி!

logo
Kalki Online
kalkionline.com