எல்லோருக்கும் இறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று தான். எல்லோரும் கடைசியாக போய் சேரும் இடமும் இதுவாகத்தான் இருக்கும். சில இடங்களில் மின் மயானங்களாகவும் சில இடங்களில் சமையல் எரிவாயு மூலமும் உடல்கள் எரிக்கப்படுகின்றன. சமையல் எரிவாயு மூலம் ஒரு உடலை எரிக்க ஒரு சிலிண்டர் போதுமானது. ஆனால் மின் தகன மேடையில் உடல்கள் வந்தாலும் வராவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கி கொண்டிருக்கும். இறந்த உடல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் ஒரு குறைந்த வெப்ப நிலையில் வைத்திருப்பார்கள். மின் தகன மேடை ஒரு உடலை எரிக்க குறிப்பிட்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. நீர் உடம்பாக இருந்தால் 45 நிமிடம் போதும். ஆண் உடலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். பெண் உடலுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். காரணம் பெண்களின் தோள்பட்டையும் விலா எலும்புகளும் மிகவும் கடினமாக இருப்பதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது.
போஸ்ட்மார்ட்டம் செய்த உடல் எரிக்கும் போது அதிக புகை வெளியேறும் காரணம் உடல் முழுக்க துணிகளும் பஞ்சுகளும் வைத்து சுற்றி இருப்பார்கள். அதன் மேல் பிளாஸ்டிக் பேப்பர் சுற்றி இருப்பார்கள். இதனால் அதிக புகையும் அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும்.
மின் தகன மேடையில் 550 டிகிரி முதல் 800 டிகிரி வரை வெப்பம் மூலம் எரிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், உடல் எரிந்து கொண்டிருக்கும் போது சில உடல்கள் வெப்பம் தாங்காமல் உட்கார்ந்து கொண்டு இருக்கும். சில உடல்கள் கை கால்கள் தூக்கி நிலையில் இருக்குமாம். வெப்பம் ஏற ஏற அவை சாம்பல் ஆகிறது. சாம்பலை வெளியேற்ற பின்புறம் தனி வழி உள்ளது. இதன் மூலம் சாம்பல் சிறிய மண் கலயத்தில் சேகரிக்கப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்படுகிறது. அந்த கலயத்தில் இறந்தவர்களின் நம்பர் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள்.
மாறி விடக்கூடாது என்பதற்காக பலர் சாம்பலை வாங்குவதற்கு வருவதில்லை என்று கூறுகிறார்கள். கலையத்தில் சேகரித்து வைத்தது மாதக்கணக்கில் ஸ்டிக்கர் ஒட்டி அங்கே இருக்கும் என்கிறார்கள்.
இதிலிருந்து வெளியேறும் புகை நவீன மின் மயானத்தில் ஒரு குழாய் மூலம் தண்ணீரில் பதிய வைத்து பின்னர் வெளியேற்றப்படுகிறது இதனால் ஆவி மட்டும் வெளியேறும் புகை அதிகம் வராது. கிராமப்புறங்களில் உள்ள மின் மயானங்களில் நீண்ட புகை போக்கி வைத்திருப்பார்கள் இதன் மூலம் புகையானது விண்ணில்கலந்து விடும் அதிக துர்நாற்றம் ஏற்படாது என்கிறார்கள்.
சில இடங்களில் லயன்ஸ் கிளப் ரோட்டரி கிளப் மூலமாகவும் சில இடங்களில் தனியார் மூலமாகவும் சில இடங்களில் மாநகராட்சி நகராட்சி மூலமும் செயல்படுகிறது. அதற்கு தகுந்தபடி 2000 முதல் 5000 வரை ஒரு உடலுக்கு வசூல் செய்கிறார்கள். மின்தகன மேடைக்கு ஒரு மாதத்திற்கு கரண்ட் செலவு இரண்டு முதல் நான்கு லட்சம் வரை செலவாகிறது.
அதனால் தற்போது மின் மயானங்கள் சமையல் எரிவாயு மயானங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மூலம் சிலிண்டர்கள் பெறப்படுகிறது. ஒரு உடலை எரிக்க ஒரு சிலிண்டர் போதுமானது. கடைசியில் மிஞ்சுவது அரை கிலோ முதல் ஒரு கிலோ சாம்பல் வரை தான் கிடைக்கும்.
இந்த தகன மேடையில் பின்புறம் நிறைய குவியல்களாக பிளேட்டுகள் ஸ்க்ரூ நட் போல்ட் கம்பிகள் போன்றவை ஏராளமாக உள்ளன. இவைகள் அனைத்தும் பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு விடுகிறார்கள். இவர்கள் அனைத்தும் ஆப்ரேஷன் செய்த உடலில் உள்ள உலோகங்கள் என கூறுகிறார்கள்.
மின்தகன மேடையில் ஒரு பர்னர் அமைக்க 50 லட்சம் செலவாகும். சமையல் எரிவாய்வு மூலம் ஒரு உடல் 45 நிமிடத்தில் எரிக்கப்படுவதால் தற்போது அனைத்து மின் மயானங்களும் சமையல் எரிவாயு மயானங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
இவை தவிர நடமாடும் எரிவாயு தகன வண்டிகளும் செயல்பட்டு வருகிறது. இவைகளும் சமையல் எரிவாயு மூலம் பயன்படுத்தப்படுகிறது.