வலுவான ராணுவத்தை கொண்டுள்ள உலகின் top 10 நாடுகள்

வலுவான ராணுவத்தை எந்தெந்த நாடுகள் கொண்டுள்ளதோ, அவை எல்லாம் மிகச் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
world countries and army
world countries and army
Published on

ஒரு நாடு எவ்வளவு வலிமையானது என்று எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? வலுவான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகள் எல்லாம் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.

1. அமெரிக்கா

உலக வல்லரசுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்கா, மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப் படையை கொண்டுள்ளது.

அமெரிக்கா உலக அளவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இராணுவ ஆயுதத்தில் 92 போர்க்கப்பல்கள், 11 விமானம் தாங்கிகள், 13,300 விமானங்கள் மற்றும் 983 ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளன. கூடுதலாக அமெரிக்கா ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளன. அமெரிக்கா, ராணுவ பாதுகாப்பு செலவினத்திற்காக $831 பில்லியன் செலவிடுகிறது.

2. ரஷ்யா

2- வது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யா தனது விமானம் மற்றும் கடற்படை வலிமையின் அடிப்படையில் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது. ரஷ்யா ஏறத்தாழ 4,100 ராணுவ விமானங்கள் 35,70,000 ராணுவ வீரர்களை கொண்டுள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்திற்காக $109 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. சீனா

3-வது இடத்தை சீனா பிடித்துள்ளது. ஏப்ரல் 2024 நிலவரப்படி சீன ராணுவத்தில் 50 பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் 78 நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட பல்வேறு ராணுவ வளங்களை கொண்டுள்ளது. 31,70,000 போர் வீரர்களையும் கொண்டுள்ளது. ராணுவத்திற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் $227 பில்லியன் செலவிடப்படுகிறது.

4. இந்தியா

4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் செல்வாக்கு அதன் கணிசமான மக்கள் தொகை விவரங்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய ராணுவத்தில் சுமார் 51,37,550 ராணுவ வீரர்கள் உள்ளனர். பாதுகாப்பிற்காக $ 74 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

5. தென் கொரியா

ஐந்தாவது இடத்தில் தென்கொரியா உள்ளது. தென் கொரியா மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் தயார் நிலையில் வெளிப்படுத்தி வலுவான இராணுவ வலிமையையும் வெளிப்படுத்துகிறது. தென்பெரிய ராணுவத்தில் 112 பவர் ஹெலிகாப்டர்கள் உட்பட 133,000 வாகனங்கள் மற்றும் 739 ஹெலிகாப்டர்கள் உள்ளனர் ராணுவ வீரர்கள் உள்ளன. ராணுவத்திற்காக மொத்தம் $44.7பில்லியன் தொகை செலவிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் ராணுவ பயிற்சி… ஒருத்தர் தப்பிக்க முடியாது!
world countries and army

6. யுனைடெட் கிங்டம்

உலகளாவிய ராணுவ வலிமையில் இங்கிலாந்து ஆறாவது இடத்தை பிடித்து உள்ளது . யு.கே இரண்டு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது. அவை சீனா, இத்தாலி மற்றும் இந்தியாவுடன் இணைந்துள்ளன. ராணுவத்தில் 11,08,860 போர் வீரர்கள் உள்ளனர். ராணுவத்திற்காக ஓராண்டுக்கு சுமார் $62.8 பில்லியன் தொகை நிறுத்தப்படுகிறது.

7. ஜப்பான்

ஜப்பான் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவ படையைக் கொண்டுள்ளது. ஜனவரி 2024 நிலவரப்படி 1,400 ராணுவ விமானங்கள் மற்றும் 111,000 அதிகமான வாகனங்களை கொண்ட ஒரு பரந்த கடற்கரையை கொண்ட ஜப்பானின் ராணுவ பலம் குறிப்பிடத்தக்கது. ராணுவத்தை மேம்படுத்த $53 பில்லியன் செலவிடுகிறது.

8. துருக்கி

துருக்கி நாடு எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 2024 நிலவரப்படி துருக்கியின் ராணுவ வலிமையானது, மொத்தம் 883, 900 ராணுவ வீரர்கள் மற்றும் $40.0 பில்லியன் ராணுவ செலவினங்களுடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் செயல்பாடு தேவைகளுக்கு எப்பொழுதும் தயாராக உள்ளன.

9. பாகிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவ வலிமையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது உலக நாடுகள் இடையே வளர்ந்து வரும் ராணுவ திறன்களையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகிறது. ஜனவரி 2024-ன் படி பாகிஸ்தான் ராணுவத்தில் 3,700 டாங்கிகள், ராணுவ விமானங்கள் 9 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 6,54,000 செயல் வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான படையை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

10. இத்தாலி

இத்தாலி நாடு பத்தாவது இடத்தில் உள்ளது. இத்தாலியிடம் 404 ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் 58 பவர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்டது. சுமார் 2 லட்சத்து 89000 ராணுவ வீரர்கள் உள்ளனர். ராணுவ செலவுக்காக ஆண்டுக்கு சுமார் $ 31.6 பில்லியன் டாலர் செலவிடுகிறது.

(சமூக வரலாறு நூலிலிருந்து தொகுப்பு)

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச்சிறிய நாடான வாடிகனுக்கு ராணுவம் உண்டா?
world countries and army

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com