

டாக்டர் பிரதீப் போஸ்ட் மார்ட்டம் முடிவைக் கூறியதும், அதர்வா நிமிர்ந்தான்.
"கார்பன் மோனாக்சைடா! அதெப்படி பெட்ரூமில்?"
"அது தெரில. ஆனா சாவுக்குக் காரணம் அதான். அட்டாப்ஸி பண்ணுன டாக்டர் சர்டிபிகேட் கொடுத்துட்டாரு."
'வாட் த ஹெல்' என அதர்வா குழப்பத்துடன் சிவராமனுக்கு கால் செய்தான்.
"சிவராம் ஹியர்..."
"அதர்வா பேசுறேன். சாரி டு சே. ப்ரியாவோட அட்டாப்ஸில அவங்க ஹார்ட் அட்டாக்ல சாகல, கார்பன் மோனாக்சைடை அதிகமா சுவாசிச்சதால செத்ததா டாக்டர்ஸ் சொல்றாங்க. உங்க வீட்ல அதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா?"
"கார்பன் மோனாக்சைடா! இங்க ஜெனெரேட்டர்கூட கிடையாதே. கார் ஷெட்டும் தனியா இல்ல இருக்கு."
"நைட்ல தனியா எங்காவது போயிருப்பாங்களா?"
"என்னை எழுப்பாம எங்கயும் போக மாட்டா."
"ஓகே...ஏதாவது தகவல் கிடைச்சா சொல்றேன்… தேங்க்யூ..."
இன்ஸ்பெக்டர் நட்ராஜ் ஹாஸ்பிடலுக்குச் சென்று விசாரித்து, மதிய உணவை முடித்துவிட்டு அதர்வாவிடம் வந்தார்.
"சார் பிரியா கார்பன் மோனாக்சைடால செத்ததா டாக்டர் இப்ப சொல்றார். ஆனா அது பைக் புகைல இருக்கும்பாங்க. எப்படி பெட்ரூமுக்கு வரும்?"
"தேடுவோம்..."