ரொம்ப தைரியசாலிப்பா..!

ஜோக்ஸ்!
ரொம்ப தைரியசாலிப்பா..!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஓவியம்: சுதர்ஸன்

“டாக்டர்... நீங்க எனக்கு தெய்வம் மாதிரி!”

“ஆபரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வமாயிடலாம். டோன்ட் ஒர்ரி.”

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

“மனைவிக்குப் பயந்தவங்க நில்லுங்கன்னு சொன்னேன். பரவாயில்லையே நீ மட்டும் உட்கார்ந்து இருக்கே... ரொம்ப தைரியசாலிப்பா நீ!”

“இல்லே... அவ வந்து சொன்னாத்தான் எழுந்திருப்பேன்.”

- தீ.அசோகன், திருவொற்றியூர்.

“கம்ப்யூட்டர் ஜோசியம் பார்த்தியே... என்ன பலன் சொல்லுச்சு?”

“இந்த வாரம் எனக்கு வைரஸ் காய்ச்சல் வர வாய்ப்பிருக்குதாம்!”

- ஆர். ருக்மணி, சென்னை.

“மாஜிஸ்திரேட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டது மகா தப்பு!”

“ஏன்?”

“எப்ப பேச ஆரம்பிச்சாலும் ‘சத்தியமா சொல்றேன்’னு சொல்லிட்டுத்தான் பேசணுமாம்!”

- புவனேஸ்வரி நாராயணன், நுளம்பூர்.

“அந்த பாகவதர் ஒவ்வொரு கச்சேரியிலும் ரொம்ப பயத்தோட பாடுவார்.”

“பாட்டு நல்லா வரணும்னா?”

“இல்ல, பாடிட்டு நல்லபடியா வீட்டுக்கு வரணும்னு.”

- ஹரிஹரன், அலுவா.

“மாணவர்களே! இந்தப் பள்ளியில்தான் நான் படித்தேன். இன்று உங்களுக்கு கற்பிக்க வந்துள்ளேன்.”

“தெரியும் சார். இங்க படிச்சங்களுக்கு வெளியில வேலை கிடைக்காதுன்னு!”

- சுகந்தாராம், தாம்பரம்.

logo
Kalki Online
kalkionline.com