மாஸ் ஹீரோ டூ மாண்புமிகு முதலமைச்சர்: தமிழக வெற்றிக் கழகத்தின் அந்த 2026 'கிளைமாக்ஸ்' திருப்புமுனை!

vijay tvk
vijay tvk
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில்  கோலிவுட் To கோட்டை – “உங்கள் பார்வையில் தளபதியின் புதிய வழி” பற்றிய கருத்தைக் கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் முதல் கட்டுரை இதோ…

எனக்கு அரசியலைப் பற்றி எந்த ஆர்வமும் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் இப்போதுதான் எனக்கு அரசியலைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது.

அதனால் தினமும் kalki online செய்திகள் மூலம் அரசியலை ஓரளவு தெரிந்துகொள்கிறேன். தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் திரைத்துறைப் பயணம் தொடங்கி இன்று அவர் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியது வரையிலான வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஒரு சினிமா கிளைமாக்ஸ் போன்றதே ஆகும். 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் இருமுனை அரசியலை உடைத்து 2026 ல் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்றது வரையிலான முக்கிய தருணங்கள்.

கோலிவுட் பயணம்: ஆரம்பக் காலம் (1980-90கள்): தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் 1992-ல் 'நாளைய தீர்ப்பு' படம் மூலம் கதாநாயகனாக மாறினார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்தாலும், பூவே உனக்காக (1996) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்து, குடும்ப ரசிகர்களைக் கவர்ந்தது. பிரண்ட்ஸ் (2001) திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் திருமலை (2003) மற்றும் கில்லி (2004) திரைப்படங்கள் அவரை அடுத்தக் கட்ட மாஸ் ஹீரோவாக மாற்றின. துப்பாக்கி, கத்தி, மெர்சர், திகில், லியோ என தொடர்ந்து பல நூறு கோடி வசூல் சாதனைகளை படைத்து கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
ஏன் வளைகுடா நாடுகளில் மட்டும் எண்ணெய் வளங்கள் அதிகமாக இருக்கின்றன?
vijay tvk

மக்கள் இயக்கம் முதல் அரசியல் கட்சி வரை: தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி, ஏழை எளிய மாணவர்களுக்குப் பயிலகங்கள், இலவச உணவு, மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி அடிமட்ட அளவில் மக்கள் செல்வாக்கை உருவாக்கினார். (2_2_2024) அன்று தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அந்த சமயத்தில், நான் ரசிகர்கள் விரும்பும் இந்த நல்ல நடிப்பை விட்டு விட்டு இவர் வேண்டாத இந்த அரசியலுக்கு ஏன் வரவேண்டும் என்று பாவமாக நினைப்பேன். இப்போதுதான் அதன் அருமை புரிகிறது.

Kalki articles
kalaimathi suvaguru

மாநாடு: விக்ரவாண்டியில் நடந்த கட்சியில் முதல் மாநாடு தமிழக அரசியலில் பெரும் உற்று நோக்கல் ஏற்படுத்தியது. மதசார்பற்ற, சமூக நீதி, சமத்துவம், மற்றும் இருமொழிக் கொள்கை ஆகியவற்றைத் தனது கொள்கைகளாக அறிவித்த போது விளையாட்டு தனமாக இவர் கூறுகிறார் எப்படி இவர் வெல்ல போகிறார் என்று வருந்தினேன்.

கோட்டை நோக்கிய தேர்தல் களம் - 2026 சட்டமன்றத் தேர்தல் : 2026 சட்டமன்றத் தேர்தலில் TVK தனித்துப் போட்டியிட்டது. பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட போது எப்படி இது சாத்தியமாகும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இரண்டிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக்கு உள்ளூர மகிழ்ச்சி அளித்தது. தேர்தல் முடிவு வெளிவந்தபோது இந்த தடவைதான் நான் மிகவும் கவனமாக அனைத்தையும் பார்த்து அரசியலைப் பற்றி நன்றாக புரிந்துகொண்டேன்.

இதையும் படியுங்கள்:
நான் சாக விரும்பவில்லை - நடிகை லட்சுமி | Kalki Kalanjiyam | Mangayar Malar
vijay tvk

கோட்டையை கைப்பற்றி ஆட்சி அமைத்தது: பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்ததால் மூன்று நாட்களாக என்னவாக போகும் என்ற துடிப்பு இருந்தது. அப்போது காங்கிரஸ் (INC), விசிக (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்தார். தமிழகத்தின் 9 வது முதலமைச்சராக 10_2_2026 அன்று ஜோசப் விஜய் முறைப்படி பதவியேற்று 13 ம் தேதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

திரையுலகில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வெறியோடு ரசிகர்களை ஈர்த்த விஜய் இன்று 62 ஆண்டு கால திராவிட ஆட்சிகளின் ஆதிக்கத்தை மாற்றி கோலிவுட் என்ற திரையுலக எல்லையைத்தாண்டி தமிழகத்தின் தலைமை செயலகங்களில் கோட்டைக்குள் முதலமைச்சராக அடி எடுத்து வைத்துள்ளது பெருமிதமாக யான் பெற்ற வெற்றியாகவே இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com