சிறுகதை: ஓட்டு விற்பனைக்கல்ல!

Election Social awareness story Tamil
Election Social awareness story Tamil
Published on
kalki strip
kalki strip

“உங்களைத்தான் எதிா்பார்த்துக் காத்திருந்தேன்...” என்றாள் ரேவதி.

"ஏன் ரேவதி... என்ன விஷயம்?” என்ற கேள்வியோடு வாங்கிவந்த ஸ்நாக்ஸ் மற்றும், கீரையைக் கொடுத்தான் சந்தானம்.

“அது ஒண்ணுமில்லீங்க... ஹோம் மேனேஜர்கிட்ட பேசிட்டேன். நாளைக்குக் காலைல உங்க அம்மாவையும் அப்பாவையும் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வாங்க. வாடகை காா் டிரைவர்கிட்ட சொல்லிட்டேன்” என சரவெடியாய் விஷயங்களை அடுக்கினாள்.

“சரி... இப்ப என்ன திடீா்னு அவங்களை அழைச்சிக்கிட்டு வரணும்?” என்றான்.

“அதுவா திட்டாதீங்க. நாளை மறுநாள் தோ்தல் வருது. அதுக்கு ரெண்டு, மூணு கட்சிக்காரங்க நைட்ல வந்து கிப்ட், பணமெல்லாம் யாருக்கும் தொியாமக் கொடுக்கறாங்களாம். நாம ரெண்டுபேரும் நாளைக்கு காலைல கிளம்பி எலக்க்ஷன் டியூட்டிக்குக் கிளம்பிடுவோம். அதனாலதான், வீடு பூட்டியிருந்தா பணத்தையும் பொருளையும் கொடுக்காம போயிடுவாங்க. அவங்களே நம்ம வீட்டுக்கு வந்து கொடுத்ததா வேட்பாளர்கிட்ட பொய்யான தகவலைச் சொல்லிடுவாங்க...” என நயமாகச் சொன்னாள் ரேவதி.

‘ஓஹோ... அதானே பார்த்தேன். நீயாவது மனசு மாறுவதாவது?’ என மைன்ட் வாய்சில் பேசினான் சந்தானம்.

“உங்க மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது. போய் குளிச்சிட்டு வாங்க... டிபன் சாப்பிடலாம்” என்றாள்.

அதிகாலை காா் வந்தது. சந்தானம் போய் அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வந்தான். வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்றாள் ரேவதி.

“ஏன்டா சந்தானம், என்ன விஷயம்? எதுக்கு ரெண்டுபேரையும் ஹோமிலிருந்து...” என இழுக்கும்போதே சந்தானம் தொடர்ந்தான்.

இதையும் படியுங்கள்:
#ELECTION BREAKING: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியீடு.!
Election Social awareness story Tamil

“அதாவது நானும் ரேவதியும் எலக்க்ஷன் டியூட்டிக்காக வெளியூா் போறோம். பத்துமணிக்கெல்லாம் கிளம்பிடுவோம். நீங்க ரெண்டு பேரும் வீட்டைப் பூட்டிக்கிட்டு எங்கேயும் போகவேண்டாம். கட்சிக்காரங்க எப்ப வேணும்னாலும் வந்து கிப்ட், பணம் கொடுப்பாங்க. நீங்க வாங்கி வச்சுக்கணும். அம்மாவையும் உங்களையும் சேர்த்து நாலு வோட்டு. அவங்க கொடுக்கறதை வாங்கி வச்சுக்குங்க. நைட்ல வெளி கேட் பூட்டவேண்டாம். வாசல் லைட் எாியட்டும் போா்டிகோவில கயத்துக் கட்டிலை போட்டுக்கிட்டு தூங்காம பேசிக்கிட்டிருங்க. கிப்ட், பணமெல்லாம் வாங்கி கேர்ஃபுல்லா வச்சுடுங்க,” என பவ்யமாய்க் கூறினான்.

“சந்தானம்... இதெல்லாம் தப்புடா. நீயும் ரேவதியும் கைநிறையச் சம்பளம் வாங்கறீங்க. வோட்டு போட பணம் வாங்கறது தப்பு. வேண்டாம்..." என பலமுறை சொல்லியும், ரேவதி மனம் மாறாததால் சந்தானமும் மெளனமானான்.

இருவரும் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு அவரவர் டூவீலரில் கிளம்பினாா்கள். சந்தானத்தின் தகப்பனாா் நோ்மையானவர். மகனின் அற்பப்புத்தியை நினைத்து வேதனையிலேயே இருந்தாா். தன்னுடைய பழைய கதைகளையெல்லாம் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டாா்.

மாலை சந்தானம் அப்பாவுக்குப் போன் செய்தான்.

“அப்பா... நீதி - நோ்மைன்னு பேசாம எந்தக் கட்சிக்காரங்க எது கொடுத்தாலும் மறுபேச்சு பேசாம வாங்கிக்கலாம்," என ஆறுதல் சொன்னான்.

இரவு 7 மணி சந்தானம் வாக்குச்சாவடியில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தான். அப்போது அப்பா நம்பரிலிருந்து போன் வந்தது “ஹலோ சந்தானம் சாருங்களா... உங்க அப்பாவுக்கு திடீா்னு நெஞ்சுவலி வந்து, நாங்க கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் அட்மிட் செஞ்சிருக்கோம் . உடனே கிளம்பி வாங்க” என விபரங்கள் சொல்லி முடித்தாா். அவரது பக்கத்து வீட்டுக்காரர்.

சந்தானம் செய்வதறியாமல், ரேவதிக்கு போன் செய்து, தோ்தல் மண்டல அலுவலருக்கு விடுப்பு சொல்லிவிட்டு வாடகை காா் பிடித்து ரேவதியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். பதட்டத்துடன் ஆஸ்பத்திாியில் நுழைந்தவுடன் ரேவதியும் மாமியாரைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழுதாா்கள் . பக்கத்து வீட்டுக்காரர் சந்தானத்திடம் பேசினாா். நாங்க புறப்பட்டு வரும் வழியில இரண்டு கட்சிக்காரங்களுக்குள்ள பணப்பட்டுவாடா சம்பந்தமா பொிய கலவரம்... டிராபிக் ஜாம்... அதனால குறிப்பி்ட்ட நேரத்துக்கு ஆஸ்பத்திாிக்கு வரமுடியலை," என்றாா்.

இதையும் படியுங்கள்:
Election Memes: என்னப்பா சொல்ற..?
Election Social awareness story Tamil

"சாாி சாா் ஒருமணி நேரம் முன்னாடியே வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம். எவ்வளவோ முயற்சி செஞ்சோம் ரிசல்ட் நெகட்டிவா போயிடுச்சு," என டாக்டர்கள் கோரசாக கூறியதோடு, "ஆஸ்பிட்டல், அட்மிஷன் பீஸ், மருத்துவச் செலவு, டாக்டர்கள் பீஸ் கட்டிட்டு, பாடியை வாங்கிட்டு போங்க...” என்றாா்கள்.

சந்தானமும் ரேவதியும் தலையில் கைவைத்தபடியே ஒன்றும் புாியாமல் முழித்துக்கொண்டே வெளியே வந்தாா்கள்.

அப்போது எதிரே ஒரு வீட்டு வாசலில் ‘எங்கள் ஓட்டு விற்பனைக்கல்ல’ என்ற போா்டு கம்பீரமாக காட்சியளித்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com