தீபாவளிக்கு செஞ்ச பலகாரங்களுக்குத்தான் பேர் வைக்கிறோம்..!

ஜோக்ஸ்!
Jokes...
Cartoon Pillai
Updated on

என்ன சார் பேர் வைக்கும் விழாவா? இன்விடேஷன்லாம் பிரமாதமா இருக்கு! 

ஆமா சார்! கண்டிப்பா வந்துடுங்க.

யாருக்கு பேர் வைக்கிறீங்க? 

என் மனைவி தீபாவளிக்கு செஞ்ச பலகாரங்களுக்குத்தான் பேர் வைக்கிறோம் சார்!

**********************

கணவன்: இப்படி ஒரேயடியா ஏழெட்டு புடவையா எடுத்துண்டு வரது? 

மனைவி: ரெண்டு புடவை எடுத்தா ஒரு துண்டு இலவசமாம்! நம்ம வீட்டுல நாலு பேர் இருக்கிறதால நாலு துண்டு வாங்கினேங்க!

 **********************

என்ன இந்த துணிக்கடையில மட்டும்  ஆம்பளைங்க கூட்டம் அதிகமா இருக்கு?

இந்த தீபாவளிக்காவது புதுத்துணி போடட்டும்னு நம்ப கடை முதலாளி ஆம்பளைங்க மேல பரிதாபப்பட்டு ஸ்பெஷலா டிஸ்கவுண்ட் கொடுக்கிறாராம்!

 **********************

ஹோட்டலில்:  கல் தோசை ஒண்ணு

சர்வர்:  நீங்க என்ன ராசி சார்?

எதுக்குப்பா?

சர்வர்: ராசி தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி "ராசிக்கல்" தோசை போடுவோம் சார்! 

 **********************

உங்க தியேட்டர்ல மாத்திரம் எப்பவும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்குதே எப்படி? 

படம் பார்க்க வர்றவங்களுக்கு வைஃபை கனெக்க்ஷன் இலவசம்னு போர்டு போட்டுருக்கோமே..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com