2 முறை நிராகரிக்கப்பட்ட புத்தகம் காட்டிய வாழ்வியல் ரகசியம்!

வாழ்க்கையை மெதுவாக அணுகினால் எப்படி புதிய அர்த்தங்கள் திறக்கின்றன என்பதை சொல்லும் கட்டுரை.
A man drink coffee
A man drink coffee | Life Philosophy Image credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

'Zen And The Art of Motorcycle Maintenance' Author Robert M. Pirsig.

இந்த புத்தகம் 102 முறை பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு 103 வது முறை பிரசுரிக்கப்பட்டு முதல் மூன்று மாதங்களில் 50,000 பிரதிகள் விற்று பிறகு 50 லட்சம் பிரதிகளை தாண்டி 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது மிகவும் பேசப்படும் ஒரு தத்துவ ஞான விளக்கம் (philosophy).

அந்த விளக்கமானது ஒரு மோட்டார் சைக்கிள் பயணத்தில் தொடங்கி எளிதாக புரிந்து கொள்ளும்படி ஒரு சுய சரித்திரம்.

இதனை மேலும் புரிந்துகொள்ள முடியும். தேடல் இருந்தால் தேடி வரும் ஞானம்.

இதோ அந்த புத்தகத்தின் ரத்தின கதை சுருக்கம்.....

ஒரு காரியத்தை நாம செய்றோம்னு சொன்னா அதை எடுத்த உடனே சிறப்பா செய்து விடுவோம் என்று நம்புறது எந்த விதத்திலும், நமக்கோ நாம் எடுத்துக் கொண்ட காரியத்திற்கும் ஒரு தீர்வாக அமையாது.

மாறாக எந்த ஒரு காரியத்தையும் நாம் மேற்கொள்ளும் முன் அதைப்பற்றிய ஒரு தெளிவும், அதனைப் பற்றிய பின்விளைவும் நம்மால் ஓரளவுக்கு கணிக்க முடியும் என்றால் அதுதான் நேர்த்தியான செயலாக இருக்கும்.

இந்த நேர்மை நம்மிடம் இருக்கும் போது அது பல உண்மைகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்.

அப்படி செய்யும் செயலில் வரக்கூடிய பக்க விளைவுகளை நாம் சரியாக எதிர்கொண்டு, மேற்கொண்டு எடுத்துக்கொண்ட காரியத்தை ஒரு படி மேலாக செய்ய அது உந்துதலாக இருக்கும்.

மேலும், இது நம்முடைய ஆர்வத்தை தூண்டி நம்முடைய படைப்பு திறனை மேலும் கூட்டி நமக்கு ஒரு உறுதுணையாக நம்மை வழிகாட்டிக் கொண்டு இருக்கும்.

ஒன்றை மட்டும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது 'உண்மை' என்பது வேறு 'தரம்' என்பது வேறு.

நாம் உண்மையை விரும்பும் போது, நம்முடைய செயல்பாடுகள் புறம் சார்ந்திருக்கும்.

நாம் தரத்தை நம்பி செயல்படும் போது அது நம்முடைய ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் (அகம் சார்ந்தது).

இத்தகைய பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய சோர்வு, ஆர்வமின்மை ஆகியவற்றை போக்கி நம்மை ஒரு அழகான சித்திரமாக வடித்துக் கொண்டு அதன் மூலம் நம்முடைய உள் பயணத்தை உல்லாசமாக அனுபவிக்க முடியும்.

எனக்கு மிகவும் பிடித்த ஆசான் dostoysky (Russia's greatest novelist) சொன்ன பொன்னான வாக்கியத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

அவர் சொல்கிறார்.......

"உன்னை அடுத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு வாழ்வது தான் இந்த உலகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அடிமைத்தனம்".

அடுத்தவர்கள் உங்களை புரிந்து கொள்ளப் போவது இல்லை. அவரவர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள்; அவர்கள் உங்களைப் பற்றி யோசிப்பதற்கு கூட நேரங்கள் கிடைப்பது கிடையாது; ஆகவேதான், சொல்கிறேன்.

இந்த உலகத்தில் உள்ள அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் விலக வேண்டுமானால் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமைகளை கண்டு ஆராய்ந்து அதற்கு மதிப்பளித்துக் கொண்டு இந்த சமுதாயத்தில் உங்கள் பங்கை இன்றே ஆற்ற தொடங்குங்கள்.

கீழே கண்ட இந்த கட்டுரைக்கு காரணமானது ஒரு பேஸ்புக் போஸ்ட்.

நான் ஒரு முறை ஜெய்ப்பூரில் உள்ள Rostery காபிக்கு சென்று இருந்தேன்.

அது ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற காபி ஷாப்.

நாங்கள் நான்கு, ஐந்து பேர் நண்பர்களாக கூடி சென்று இருந்தோம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காசே தான் கடவுளா?
A man drink coffee

அது ஒரு ஃபேமஸ் டீ ஷாப் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உள்ளே சென்றதும் அங்கே உள்ள பானங்கள் ஒரு ஒயின் ஷாப் போல எல்லா டேபிள்களிலும் அழகாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பருகும் பானத்தில் மேலே இளம் சிவப்பு கலந்த ஒயின் போலவும், கீழே தெளிந்த பதநீர் போலவும் காட்சி அளித்தது.

நாங்களும் அதை பருகுவதற்காக ஆர்டர் செய்தோம். அந்த காபிக்கு பெயர் Cranberry coffee.

அப்படி என்னதான் இருக்கிறது என்பதற்கு முதலில் நான் அதை எடுத்து கொஞ்சம் பருகினேன்.

எனக்கு அது கசப்பாக இருந்தது. பிடிக்கவே இல்லை. இப்படி ஒரு பானத்தை அருந்துவதற்காகவா இந்த அளவுக்கு செலவு செய்து இப்படி அமர்ந்து நம்முடைய நேரத்தை வீணங்கி கொண்டிருக்கிறோம் என்ற ஒரு சலிப்பு வந்தது?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பிணத்தின் அழுகுரல்: மரணத்திற்குப் பின் ஒரு மறு விசாரணை!
A man drink coffee

திரும்பவும் பருக ஆரம்பித்தேன். மேலும் எனக்கு சலிப்பும் வேதனையும் தான் கிடைத்தது. சரி இதனை இப்படியே விட்டு விடுவோம் என்று நான் வைப்பதற்குள் என்னை பார்த்த சர்வர் என்னிடம் வந்து மெதுவாக என் காதருகில் சொன்னார்....

"சார் கொஞ்சம் பொறுமையாக உங்கள் teaspoon எடுத்து அந்த பானத்தை கலக்கி அதன்பிறகு பருகவும். அவர் சொன்னபடியே செய்து பிறகு குடிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் புரிந்தது அதனுடைய உண்மையான taste மற்றும் அதனுடைய புத்துயிர்ப்பு தன்மை.

ஆக நான் செய்த தப்பு இதுதான்.

எடுத்தவுடனே எந்தவிதமான ஆராய்ச்சியும் இல்லாமல், என் முடிவுகளை நான் தான்தோன்றித்தனமாக எடுத்ததே காரணம்.

இதன் மூலம் நான் கண்டறிந்த உண்மை.

பிறரை அணுகும் போது நம் முடிவுகளைப் புறந்தள்ளி ஒரு சிறந்த மனத்தோடு பழக ஆரம்பித்தால், நமக்கு பல முடிச்சுகளை அவிழ்த்து பல அதிசயங்களை நமக்கு காட்ட இந்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

Simple philosophy

Look, Pause, Stir....

logo
Kalki Online
kalkionline.com