'சூப்பர் சக்தி'க்கான 10 'சூப்பர் புட்ஸ்'!

woman and 10 superfood
woman and 10 superfoodImg credit: AI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

பெண் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவள் என்பதால் அவர்கள் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு சில சூப்பர் உணவுகள் உதவுவதாக உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சத்துக்கள் நிறைந்த இவற்றை அன்றாட உணவில் பெண்கள் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

1. தயிர்: பெண்களின் எலும்புகளின் பலம் காக்கும் கால்சியம் சத்து தயிரில் உள்ளது. இதனால் பெண்களை தாக்கும் எலும்பு மெலிவு நோயான ஆஸ்ட்ரோபொராசிஸ் வருவது தவிர்க்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. 'இரிட்டேடட் பவுல் சின்ட்ரோம்' எனும் குடல் நோய் தவிர்க்கப்படுகிறது. மேலும் குடல் மற்றும் பிறப்புறுப்பு தொற்றுநோய்கள் வருவது தவிர்க்க உதவுகிறது. தினமும் பெண்கள் ஒரு கப் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒமேகா 3: பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க 'ஒமேகா3' உதவுகிறது. காரணம் இல்லாமல் ஏற்படும் எரிச்சல், கோபத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. இதன் குறைபாடு காரணமாக இதய நோய்கள், நினைவுத் திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். வாரம் 2 அல்லது 3 முறை மீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சைவ உணவு எடுப்பவர்கள் கொட்டை மற்றும் விதைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

3. பீன்ஸ்: புரதத்தின் சிறந்த மூலமாகவும், அதிக நார்ச்சத்துகளை செரிவாகவும் கொண்டுள்ளது. பீன்ஸ் அதிகமாக எடுத்துக் கொள்ள மார்பகப் புற்றுநோயின் அபாயம் 28% வரை குறைக்கின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது என்கிறார்கள். வாரத்தில் 3 அல்லது 4 நாட்களாவது உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காரணமே இல்லாமல் உள்ளங்கையில் வியர்க்கிறதா? உங்க உடம்பு சொல்லும் ரகசியம் இதுதான்!
woman and 10 superfood

4. தக்காளி: சரும பராமரிப்பிற்கு நல்லது பளபளப்பான சருமம் வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வாருங்கள். தக்காளியில் லைகோபீன், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் சரும சேதத்தை மெதுவாக்குவதற்கும் கொலாஜனை அதிகரிப்பதற்கும் உதவும்.

5. முழு தானியங்கள்: இந்த வகை உணவுகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், மெட்டபாலிசத்தை சீராக வைக்கவும் உதவுகின்றன. தானியங்களில் பிரெளன் அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்றவை உடலுக்கு தேவையான நார்ச்சத்தை வழங்குகின்றன.

நமது உடல் பொட்டாசியம் சந்தை தக்க வைக்க முழு தானியங்கள் உதவுகின்றன. தினமும் ஏதேனும் ஒரு தானியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பைரிடாக்சின் (Pyridoxine) எனும் வைட்டமின் B6, தானியங்களில் அதிகமுள்ளது. மாதவிடாய்க்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு முக்கிய காரணம் இந்த வைட்டமின் குறைபாடு தான்.

6. டார்க் சாக்லெட்: இதில் 'டிரைப்டோபேன்' அதிகம் உள்ளது. இது உற்சாக மனநிலையை வழங்கும் சொரட்டோனின் ஹார்மோன் தூண்ட உதவுகிறது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பி.எம்.எஸ் அவஸ்தையை தவிர்க்க உதவுகிறது. தினமும் ஒரு பார் சாக்லேட்டில் கால் பங்கு சாப்பிட அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயநோய் மற்றும் பக்கவாதம் வராமல் தவிர்க்க உதவுகிறது.

7. பசலைக் கீரை: இதில் உள்ள வைட்டமின் A, C, ஃபோலேட், இரும்புச் சத்து முடி உதிர்வைத் தடுத்து, உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள ஃபோலேட் பிரசவ குறைபாடுகளை தவிர்க்கும்; இதய நோய்கள் வராமல் தவிர்க்கும்; குடல் புற்றுநோய், ஞாபக மறதி மற்றும் வெப்ப கால சரும பாதிப்பை தவிர்க்கும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: செயற்கை நகங்களின் மறுபக்கம்!
woman and 10 superfood

8. பெர்ரி பழம்: செல் பாதிப்புகளை தவிர்க்க உதவும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரக தொற்றுநோய்களை தவிர்க்க, பார்வை குறைபாடு தவிர்க்க மற்றும் சரும பாதுகாப்புக்கு உதவும். வாரம் 3 அல்லது 4 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

9. பப்பாளி: வைட்டமின்கள் ஏ, சி, இ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், செரிமானத்துக்கு உதவும் பப்பைன் என பல்வேறு நன்மைகளைக் கொண்டது. இது பெண்களுக்கு அதிக தொந்தரவு தரும் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் தவிர்க்க உதவுகிறது. மேலும், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. தினமும் இரண்டு துண்டுகளாவது சாப்பிட வேண்டும்.

10. சர்க்கரை வள்ளி கிழங்கு: ஊட்டச்சத்து மிகுந்த கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளி கிழங்குகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதில் செரிந்து காணப்படும் வைட்டமின்கள் ஏ, பி6, சி, டி, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் செரிமானத்தையும் மேம்படுத்துகின்றன. இதில் காணப்படும் கெரட்டினாய்டுகள் வயிறு, சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோய்யை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com