மினி கதை: அந்த 7 வருடங்கள்!

true love story Tamil
true love story Tamil
Published on

விஜய் 7 வருஷமாக ரமாவைக் காதலித்து வருகிறார். விஜய் மட்டும் அல்ல. ரமாவும் விஜயை 7 வருடங்களாகக் காதலித்து (true love story Tamil) வருகிறார்.

இருவரும் வெவ்வேறு சாதி. இருவருமே சாதி பார்ப்பது இல்லை. சுமார் 6 வருடங்களுக்கு முன் விஜய் கட்டாயம் செய்ததால் ரமா வீடு சென்று பெண் கேட்டார்கள். ரமாவின் அப்பா சாதியில் பிடிப்பாக இருந்தார். ஆதலால் விஜய் அம்மா அப்பாவை உதாசீனம் செய்து அவர்களைத் திட்டி துரத்தினார்.

விஜய் அம்மா – அப்பா, “உனக்கு வேறு பெண் கிடைக்கலையா? உன் அழகுக்கு, சம்பளத்திற்கு 1000 பெண்கள் வருவார்கள்.”

“அப்பா… எனக்குக் கல்யாணம் என்றால் அது ரமா உடன்தான். இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இதில் மாற்றம் இல்லை.”

“அப்படி என்ன ரமா உசத்தி…? ரமா.. ரமா… என்று புலம்புறே?”

“அப்பா… அவள் அருமை எனக்குத்தான் தெரியும்…!”

ரமா வீடு.

அப்பா அம்மா ரமாவிற்குக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தார்கள்.

ரமா, “தனக்கு கல்யாணம் என்று ஒன்று இருந்தால் அது விஜயுடன்தான். நீங்கள் வேறு யாருக்காவது கல்யாணம் செய்ய முயற்சியில் ஈடுபட்டால் நான் சத்தியமாக தற்கொலை செய்துகொள்வேன்…” என்று உறுதியாகச் சொன்னார்.

ரமா அப்பா ரமாவை ஒரு அறை அறைந்தார். ரமா கலங்கவில்லை.

“அப்படி என்ன விஜய்... விஜய்… என்று புலம்புகிறாய்…?”

“விஜய் விஜய்தான். எனக்கு என்று ஒரு கணவன் இருந்தால் சத்தியமாக அது விஜயாக மட்டுமே இருக்கும்!”

இதையும் படியுங்கள்:
சிறுகதை; தகப்பன் சாமி..!
true love story Tamil

ரமா இனி வேலைக்குப் போக வேண்டாம் என்று அப்பா முடிவு செய்தார். ரமா ஆபீஸுக்கு வராதது அவர் அப்பாதான் காரணம் என்று விஜய் புரிந்துகொண்டார். மொபைல் நம்பருக்குக் கால் செய்தார். ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. ரமா அப்பா ரமாவின் மொபைலை பிடுங்கிவிட்டார்! ஆனால் அவருடன் பேச முடியாமல் போனாலும் அவர் மீது காதல் குறையவில்லை. அதிகம் பரிதாபம்தான்.

ரமாவிடம் வேலையை ராஜினாமா செய்ய சொன்னார் அப்பா.

கலகம் பிறந்தது.

“நான் வேலையை விடமாட்டேன். மீறி நீங்கள் கட்டாயம் செய்தால்… உங்கள் மீது போலீஸிடம் புகார் மனு கொடுக்க தயங்கமாட்டேன்…!”

பளார்… பளார்.. அப்பா இரண்டு முறை அறைந்தார்.

ரமா அழுதுகொண்டே… "இதையும் போலீஸில் சொல்வேன். நான் ஒரு மேஜர். என்னை நீங்கள் அடிக்கக்கூடாது!”

அப்பா வெளியேறினார். இப்படி வருடங்கள் ஓடின. ரமா அப்பா தனது நண்பர்களிடம் இந்தப் பிரச்னை பற்றி பேசினார். எல்லோரும் "ரமா-விஜயுக்கு கல்யாணம் செய்யுங்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. 21ம் நூற்றாண்டில் யார் சாதி பார்ப்பார்கள்…?" என புத்திமதி சொன்னார்கள்.

ரமாவுக்கும் வயது ஆகிக்கொண்டே இருக்கிறது.

விஜய் பொறுமையுடனும் இருந்தார். ரமா மிகவும் வருத்தத்தில் இருந்தார். விஜயைப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. ஆனால், இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள்.

செம ஸ்டாராங். செம உறுதி.

விஜய் வீட்டில் கல்யாணம் ரமாவுடன் செய்ய சம்மதம் தெரிவித்தார்கள். ரமா அப்பா மனசு மாறினார். காரணம் ரமா உறுதியாக இருப்பது தெரிந்தது. ஆனால், விஜய் வீடு செல்ல தயக்கம். ரமாவுக்காக போவதாகத் தீர்மானம் செய்தார்.

ரமா அம்மா மற்றும் அப்பா விஜய் வீட்டிற்குச் சென்றார்கள்.

விஜய் பெற்றோர் ரமா அப்பா - அம்மாவை நன்கு உபசரித்து வரவேற்றார்கள்.

இனி என்ன… ?

இன்று நிச்சயதாம்பூலம்.

கல்யாணம் அடுத்த மாதம்.

இதையும் படியுங்கள்:
தேவகியிடம் ஒரு கேள்வி...
true love story Tamil

இப்போது விஜய் ரமாவுடன் மொபைலில் பேசினார்.

இருவருக்கும் சந்தோஷம். மனம் துள்ளி குதித்தது.

கல்யாணம் சிறப்பாக நடந்தது.

7 வருடங்கள் காத்து இருந்தது விஜய்-ரமா உறுதியைக் காட்டியது.

இதுதான் உண்மை காதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com