
தமிழகத்தில் மட்டுமே சிறப்பான நாளாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாயத்தை செழிக்க வைக்கவும் காவிரி அன்னையை வழிபடுவது வழக்கம். இந்த நாளில் ஓடுகின்ற நீர்நிலைகள் அனைத்திலும் காவிரித்தாய் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால்தான் ஆடிப்பெருக்கல் நீர்நிலைகளுக்கு சென்று நீராடுவது வழிபடுவதும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
ஆடிப்பெருக்கு என்பது பெருக்கத்திற்கான ஒரு மங்களகரமான நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு வாங்கும் பொருள் என அனைத்தும் பெருகிக் கொண்டே போகும், என்பதால் இந்த நாளில் பெண்கள் தங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு தாலிக்கயிறு மாற்றிக்கொள்ளும் பழக்கம் உள்ளது.
ஆடிப்பெருக்கு நாள் நீர்நிலைகளை குறிப்பாக காவேரி நதியை வழிபடுவதற்கான ஒரு முக்கியமான நாள் ஆகும்.
இந்த நாளில் மக்கள் புனித நீர் நதிகள் நீராடி நதிகளுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவது சிறப்பானதாகும்.
சிறப்புகள்:
ஆடிப்பெருக்கு நாள் அட்சய திருதியை நாளுக்கு இணையான நாளாக கருதப்படுகிறது .
இந்த நாள் பலரும் நல்ல விஷயங்களை துவக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கம் வெள்ளிப் பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாமா என நினைக்கிறார்கள்.
அதற்கு நிகரான மங்கலப் பொருட்களையும் வாங்கியும் வீட்டில் வைக்கலாம்.
செய்ய வேண்டியது:
ஆடிப் பெருக்கில் ஆற்றங்கரை, குளக்கரை, நதிகளில் சென்று தீபம் ஏற்றி வழிபடலாம்.
புனித நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய புண்ணிய காரியங்களைச் செய்யலாம்.
திருமணமான பெண்கள் தாலி கயிறு மாற்றலாம். மற்ற சுமங்கலி பெண்களுக்கு தாலிக் கயிறு தானமாக கொடுக்கலாம்.
நீர்நிலைகளின் கரைகளில் விளக்கேற்றி மகாலட்சுமி பூஜை செய்யலாம்.
வீட்டில் சாமிக்கு பலவிதமான கலவை சாதம், பழங்கள் இனிப்பு வரைகள் போன்றவை படைத்து வழிபடலாம்.
கோ பூஜை செய்வது எல்லாம் கோசலைகளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
அம்பாளுக்கு வேப்பிலை மாலை கட்டி சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்பு செய்து வைத்து படைத்து வழிபடலாம்.
ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் குறையாமல் இருக்கும்படி வாங்கி நிரப்பி வைக்கலாம்.
ஆடிப்பெருக்கு அன்று நகை வாங்க முடியாதவர்கள் மஞ்சள் கிழங்கு சிறிது வாங்கி வைக்கலாம். தங்கத்திற்கு இணையான மஞ்சள் வீட்டில் செல்வத்தை பெறுக செய்யும்.
ஆடிப்பெருக்கு என்று குபேரருக்கு குபேர நாணயங்கள் வைத்து அர்ச்சனை செய்து குபேர பூஜை செய்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
சூரியன், புதன் சேர்க்கை நடைபெறும் நாளே ஆடிப்பெருக்கு என்பதால் நவ தானியங்கள் வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம்.
மகாபாரத போர் நிறைவடைந்து தர்மம் நிலை நாட்டப்பட்ட நாள் ஆடி18 என புராணங்கள் சொல்கின்றன. இதனால் அன்றைய தினம் பாகவதம் பகவத் கீதை வாசிப்பது மிகவும் சிறப்பானது..
காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தை பேறு, திருமண பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யம் தேடி வரும்.
வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
மஞ்சள் நிற பூக்கள்
மஞ்சள்
ஜவ்வரிசி
கல் உப்பு
பச்சரிசி
ஊறுகாய்
இந்த ஆறு பொருட்களும் தங்கம், வெள்ளிக்கு நிகரானவை ஆகும். வீட்டில் எப்போதும் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சமையல் பயன்படுத்த அரிசி பருப்பு எண்ணெய், உப்பு போன்றவற்றை குறைவில்லாதபடி வீட்டில் வாங்கி வைக்கலாம்.
ஆவணி மாதத்தில் திருமணம் வைப்பவர்கள் அதற்கு தேவையான புடவை , நகை போன்ற பொருட்களை ஆடிப்பெருக்கு நாளில் வாங்கலாம்.
கோயில்களில் சிறப்பு:
அன்று ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை ஆடி 18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து அன்று மாலை புடவை திருமணம் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க வசிஷ்ட முனிவர் கூறியபடி காவிரியில் நீராடி நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆடிப் பெருக்கு நாளில் தம்பதிகள் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு நாளில் நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டு முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் பாவங்களை போக்கி வாழ்வில் நல்ல புண்ணியம் பெறலாம்.