

வருணின் அழைப்பில் அவன் வீட்டிற்கும் சென்று வர ஆரம்பித்தாள் லதா. அவனின் அப்பா தேவராஜனுடனும் நன்கு பேசி, பழக ஆரம்பித்தாள். வருண் வீட்டிற்கு சென்றுவிட்டால் கொண்டாட்டம் தான். அவனுடன் சேர்ந்து பாடல்கள் கேட்பது, கேரம், செஸ் விளையாடுவது, அவனின் சிறுவயது ஆல்பங்களை பார்த்து ரசிப்பது, சில சமயங்களில் அவன் அப்பாவின் கைப்பக்குவதில் கிடைக்கும் உணவை சுவைப்பது, அவனின் உறவினர்களிடமும் அரட்டை என்று அந்த வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள் லதா.
லதாவின் திருமண பேச்சை எடுக்க முடிவு செய்த மாலதி, லதா சென்னை வந்த ஒரு நாள் ஆரம்பித்தாள். “லதா நான் உனக்கு வரன் பாக்க ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன், ஜாதகம் அனுப்ப போறேன்...”
முடிக்குமுன் லதா “அம்மா இப்போ என்ன அவசரம், நான் வேலைக்கு சேர்ந்தே எட்டு மாசம் தானே ஆகுது? ஒரு வருஷம் கழிச்சு நானே சொல்றேன்ம்மா. அப்போ பாத்துக்கலாம், இப்போ அந்த பேச்சே வேணாம் 'ப்ளீஸ்'.
இனி இவளிடம் பேசுவது எடுபடாது என்று நினைத்த மாலதி நகர்ந்தாள்.