உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா?

செப்டம்பர் 02 உலக தேங்காய் தினம்!
உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா?
Published on

கிருமி நாசினி

தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமி நாசினியாகத் திகழ்கிறது. தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறுவது காக்கிறது.

 பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற!

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காய் மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. மேலும் தேங்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரசிஸ் நோய் ஏற்படாமல் காக்கிறது. பற்களுக்கு பளபளப்பு தன்மையும் கொடுக்கிறது.

 சரும நலம் மேம்பட!

மது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சினைகள் போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது. தினமும் சிறிது தேங்காய் மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து சரும பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு சரும அரிப்பு போன்ற தொற்று கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும்  போக்குகிறது.

தலைமுடி உதிர்வை தடுக்க!

ன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்னைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

நார்ச்சத்து!

நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவு நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளை காட்டிலும் தேங்காயானது,  61% நார்ச்சத்து கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் இந்த  நார்ச்சத்து முழுமையாக நமக்கு கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கணையத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் உற்பத்தி செய்து உடலுக்கு மிகுதியான சக்தியை கொடுக்கிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கிறது.

தொந்தியை கரைக்க!

ம்மில் பலர் அன்றாடம் ஒரு வேளையாவது கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்கிறோம். சரியான உடற்பயிற்சி இல்லாமலும் முறையற்ற உணவு பழக்கங்களும் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கொழுப்பு சத்து நாளடைவில் உடலில் அதிக அளவு சேர்ந்து கொண்டு தொந்தியை ஏற்படுத்துகிறது. மற்ற இடங்களில் படுகின்ற கொழுப்பைக் காட்டிலும் வயிற்றுப் பகுதியில் படிகின்ற கொழுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுத்து தொந்தி ஏற்படாமல் காக்கிறது.

எபிலெப்சி வலிப்பு குணமாக!

பிலெப்சி என்பது கால் கைகளில் ஏற்படும் வலிப்பு பிரச்னை. இந்த கால் கை வலிப்பு என்பது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகும் ஒரு குறைபாடாகும்.  குறிப்பாக 1 முதல் 12 வயது உள்ள குழந்தைகளின் இந்த குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கீட்டோன் சத்து குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  தேங்காயை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது.

இளமை தோற்றம் ஏற்பட!

ட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது அளவுக்கு மீறிய உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு  இளம் வயதிலேயே உடல் அளவில் முதுமையான தோற்றம் ஏற்பட காரணமாகிறது. இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும். தேங்காயில் சைட்டோகைனின்  கைநெட்டின்  டிரான்சீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை நமது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரித்து உடலுக்கு பலத்தை தருவதோடு இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்துகி்ன்றன.

சிறுநீரகத் தொற்று நோய்கள் குணமாக!

னிதர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாகக் கூடிய நோய்களில் ஒன்று சிறுநீரகத் தொற்று நோயாகும். இந்த நோய் ஏற்பட்டால் சிறுநீர்ப்பை சிறுநீர் குழாய் சிறுநீரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு அந்த நபர் ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும்போது மிகுந்த வேதனைக்குள்ளாகிறார். தேங்காயில் கிருமி நாசினி வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் மென்று சாப்பிடுபவர் களுக்கு இந்த சிறுநீரகத் தொற்று நோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com