
பெண்களுக்கு மேக்கப் (அலங்காரம்) செய்து கொள்வது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். இதிலும் கூட நமது ராசிக்கு தகுந்த மாதிரி வண்ணங்களை பயன்படுத்தி அலங்காரம் செய்தால் நமக்கு நாள் முழுவதும் நல்லதே நடக்குமாம். எந்த ராசிக்கு எந்த மாதிரி அலங்காரம் நல்லது என பார்ப்போம்:
மேஷம் ராசி: இந்த ராசிக்குரியவர்கள் ஆதிக்க சக்தி கொண்டவர்களாகவும் திறமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பிரகாசமான சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் பயன்படுத்த வேண்டும். கண் மையும் பயன்படுத்தலாம். சிவப்பு வண்ணங்கள் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி: இவர்களுக்கு வாழ்க்கை மீது மிகவும் பற்றுதல் இருக்கும். பிரகாசமான அடர்த்தியான வண்ணங்களை விரும்புவார்கள். பச்சை மற்றும் பிரவுன் வண்ணங்கள் நல்லது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே கண்கள் அழகாக இருக்கும். அதை மேலும் மெருகூட்ட வேண்டும்.
மிதுனம் ராசி: இந்த ராசிக்கு உடையவர்கள் தேர்ந்தெடுப்பது எல்லாமே சிறப்பாக இருக்கும். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணம் நல்லது. யாரையும் கவரும் வகையில் உங்கள் தோற்றம் அமையும்.
கடகம் ராசி: புதுவகை அலங்காரம் அனைத்திலும் அதிக ஆர்வம் ஏற்படும். மெட்டாலிக் வண்ணத்துடன் கல் அலங்காரங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
சிம்மம் ராசி: இவர்கள் அடிக்கடி மேக்கப் செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால் மேக்கப் பொருட்கள் மீது அதிக விருப்பம் இருக்கும். எனவே விலை உயர்ந்த மேக்கப் சாதனங்களையும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். இவர்களது ஆதிக்க நாயகன் சூரியன். எனவே தங்க வண்ணம் அதன் தொடர்புடைய வண்ணங்களை பயன்படுத்துவது நல்லது.
கன்னி ராசி: சிறந்த பொருளை எப்படி தேர்வு செய்வது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல நிறுவன பொருட்கள் தேவை என்று கருதாமல் விலையும் மலிவானதில் எது சிறந்தது என்று தேர்வு செய்வார்கள். அடர்த்தியான நீலம் மரகதம் பச்சை வண்ணங்கள் நல்லது.
துலாம் ராசி: கிடைப்பதற்கு அரிய பொருட்களை எப்படி பெற வேண்டும் என்று இவர்களுக்கு தெரியும். எல்லா வண்ணங்களுமே பொருத்தமானதாக இருக்கும். முகம் பெரும்பாலும் வெளுத்து காணப்படும். அதை மறைக்கும் வகையில் சிறப்பாக அலங்காரம் செய்து கொள்வது நல்லது.
விருச்சிகம் ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு கவர்ச்சியான முகம், நீளமான கன்ன எலும்பு, நீண்ட இமைகள், நீளமான கழுத்து அமைந்திருக்கும். வெண்கலம் செம்பு பேஸ்டல் நிறங்கள் நல்லது. கண்களை மையிட்டு அலங்கரித்து இருக்க வேண்டும். லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது உங்கள் முக அழகை அதிகரித்துக் காட்டும்.
தனுசு ராசி : இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை கவரும் வகையில் இருப்பார்கள். முகத்தில் எப்போதும் தெளிவு இருக்கும். ஆனால் வண்ணங்கள் அலங்காரங்களை தேர்வு செய்வதில் குழப்பங்கள் இருக்கும். அடர்த்தியான வண்ணங்கள் குறிப்பாக அடர்த்தியான ஆரஞ்சு வண்ணம் நல்லது. நீல நிறம் மீது இவர்களுக்கு விருப்பமாக இருக்கலாம்; ஆனால் அது உங்கள் ஆர்வத்தை குறைக்கும் வகையில் அமைந்து விடும்.
மகரம் ராசி: மேக்கப் மீது மகர ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஆனால் சிரத்தை எடுத்து மேக்கப் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். மண்ணின் நிறத்தை ஒத்துள்ள அதாவது பிரவுன் மற்றும் அதை ஒட்டிய வண்ணங்கள் இவர்களுக்கு நல்லது. அடர்த்தியான வண்ணம் கொண்ட லிப்ஸ்டிக் சிறப்பானதாக அமையும். பிரகாசமான வண்ணங்கள் இவர்களுக்கு நன்றாக அமையாது.
கும்பம் ராசி: கும்பம் ராசிக்காரர்கள் மேக்கப்புக்காக அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் தாங்களே கற்பனை செய்து உருவாக்கும் மேக்கப் அலங்காரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது நன்றாக எடுபடுவதாகவும் அமையும். இளஞ்சிவப்பு நீலம் பச்சை வெள்ளை கலர்கள் நல்லது.
மீனம் ராசி: மீன ராசி பெண்கள் கனவு உலகத்தில் மிதப்பவர்களாகவும் காதல் எண்ணம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் அமைதியான குணம் இருக்கும். இளம் சிவப்பு, நீல வண்ணங்கள் இவர்களுக்கு ராசியாக அமையும்.