
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல வித ஊட்டச்சத்துக்களை தரும் பழங்கள் காய்கறிகள் மற்றும் பிற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு குங்குமப்பூ சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் ஊட்டச்சத்து நன்மைகள்:
குங்குமப்பூ ஒரு மதிப்புமிக்க மசாலா பொருளாகும். இதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 1.5 கிராம் குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து அருந்தி வருவதால் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
விட்டமின்கள், மற்றும் தாதுக்கள்:
குங்குமப்பூவில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இரும்புச்சத்து இரத்த சிவப்பணு உற்பத்திக்கு அவசியமானது. இது கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வைட்டமின் சி இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது.
ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள்:
குங்குமப்பூவில் குரோசின், பிக்ரோகுரோசின் மற்றும் சஃப்ரானல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன. இந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு சக்திகள் வளர்ச்சிதை மாற்றங்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் அதிகரிக்க கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
அமைதிப்படுத்தும் விளைவுகள்:
குங்குமப்பூவில் அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதியாக வைக்கும். கர்ப்ப காலத்தை மிகவும் நிதானமாக எதிர்கொள்ள வைக்கும்.
செரிமான மேம்பாடு:
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். தினமும் குங்குமப்பூவை சிறிதளவு உண்டு வருவதால் மலச்சிக்கல் குமட்டல் போன்ற கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இருதய ஆரோக்கியம்:
குங்குமப்பூவில் பொட்டாசியம் உள்ளதால் இது ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் கொழுப்பு மற்றும் டிரை கிளிசரைடுகளை குறைப்பதனால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இது தாய் மற்றும் வளரும் குழந்தை இருவருக்கும் பயன் அளிக்கிறது
கரு வளர்ச்சி:
குங்குமப்பூ கருவின் வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உளவியல் நன்மைகள்:
குங்குமப் பூவில் இயற்கையான மன அழுத்த எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மனநிலை மாற்றங்களும் பதட்டமும் ஏற்படும். இவற்றை ஒட்டுமொத்தமாக தடுக்க குங்குமப்பூ உதவுகிறது. இது உடலில் செரட்டோனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த மனநிலையும் மேம்பட்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும். பல பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு மனச்சோர்வு உண்டாகிறது. குங்குமப்பூவை தினமும் உண்டு வந்தால் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை தடுக்க உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், உணர்ச்சி ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் போது குங்குமப்பூ நன்மை பயக்கும்.
குங்குமப்பூ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் அதை மிதமாக உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு ஒன்று முதல் நான்கு இழைகள் வரை உட்கொண்டால் போதுமானது. மேலும் குங்குமப்பூவை கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதில் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.