
சமையலில் மட்டுமல்ல... உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பிரிஞ்சி இலை, பிரியாணி இலை, லவங்கப்பத்திரி, பட்டை இலை, தமாலபத்திரி, மலபார் இலை, தேஜ்பட், தேஜபட்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய மசாலா பொருட்களில் இந்த இலை முக்கியமானதாகும். பிரிஞ்சி இலை பொதுவாக சுவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும். தால் மக்கானி, புலாவ், பிரியாணி, சூப், சைவ மற்றும் அசைவ உணவில் கூடுதல் வாசனைக்காக சேர்க்கப்படுவது தான் இந்த பிரிஞ்சி இலை.
இந்த இலையை சமைக்கும் போது பயன்படுத்திய பின்னர் சாப்பிடும் போது அல்லது உணவு பரிமாறும் போது வெளியே எடுத்து விடுவார்கள். இந்த இலைகள் விஷம் என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.
பிரிஞ்சி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் ஆகிய நல்ல மூலங்கள் அதிகளவு உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில்
கலோரிகள் - 5.5 கிராம்,
புரதம்: 0.1 கிராம்,
கொழுப்பு: 0.1 கிராம்,
கார்போஹைட்ரேட்டுகள்: 1.3 கிராம் உள்ளது.
இது உங்கள் உணவில் குறைந்த கலோரிகளை சேர்த்து நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்க உதவும். பிரியாணி இலையில் இருக்கும் இரசாயனங்கள் சுவாச ஆரோக்கியத்திற்கும், இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி போன்றவற்றை குணப்படுத்த பெரியதும் உதவுகிறது.
இந்த இலையில் டீ தயாரித்து, அதில் தேன் கலந்து குடிப்பதால், உடலிலுள்ள கொழுப்புகள் கரையும், ஜீரண பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். பிரிஞ்சி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
2014-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி,பிரிஞ்சி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யலாம் என்று நிறுபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் பிரிஞ்சி இலை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று கூறுகின்றன. நார்ச்சத்து மூலதனமாக கருதப்படும் பிரிஞ்சி இலைகள், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு மூலம் உட்கொள்ளும் கலோரிகளை எரிக்க ஒரு நல்ல வளர்சிதை மாற்றம் உங்கள் எடையை குறைக்கும் பயணத்திற்கு அவசியம். இந்த இலை உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவும்.
பிரிஞ்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு அதனுடன் கிராம்பு சேர்த்து கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்ததும் வடிகட்டி அதில் சில தேக்கரண்டி தேன் அல்லது பேரீச்சம்பழம் சிரப் சேர்த்து டீ, காபிக்கு பதிலாக பருகலாம்.
பிரியாணி இலைகளை ஊதுபத்தி போல எரித்தால், அதன் புகையில் இருந்து வெளியேறும் Linalool மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை உண்டாக்கும்.
அதிகளவு பயன்கள் இருந்தாலும் பிரியாணி இலையை அளவுக்கு அதிகமாக அல்லது தவறான முறையில் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.