
தேங்காய் எங்கே? பூஜைத் தட்டுல காணமே! சீக்கிரம் கொண்டு வாங்க!
"நினைச்ச காரிய நடக்கணமா? பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடு!" இப்படி பல முக்கியமான நிகழ்வுகளிலும் பிரதானமாக பங்கேற்கும் தேங்காய்.
வீட்டு பூஜைகள், கோவில் பூஜைகள், கலசத்தின் மீது வைக்க, வடல் போட, விதவிதமான பதார்த்தங்கள் செய்ய என எல்லாவற்றிற்கும் தேங்காய் தேவை. இளநீர் குடிக்காதவர்களே கிடையாது.
தேங்காய் நார், ஓடு போன்றவைகளும் உபயோகத்திற் குரியவைகள். தேங்காயை, உலக முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தேங்காய் வரலாறு:
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC), ஆசிய நாடுகளில் தேங்காய்களின் வளர்ச்சி, உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக 1969 இல் நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினத்தை கொண்டாடும் முயற்சியை ஆந்திர பிரதேச காங்கிரஸ் தொடங்கியது.
இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் ஆகியவை APCC இல் உறுப்பினர்களாக உள்ள சில நாடுகளாகும். தேங்காய், உலக தேங்காய் தினமாக விவசாயிகள் மற்றும் தென்னை வளர்ப்பு வணிகத்தில் பங்குதாரர்களால் கொண்டாடப்படுகிறது. தேங்காய்களை உட்கொள்வதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுடன் மக்கள் நாளைத் திட்டமிடுகிறார்கள்.
தேங்காயின் நன்மைகள்:
தேங்காய், சாப்பிடுவதற்கு ஏற்ற, ஒரு சிறந்த உணவாகும். பலவித நன்மைகள் நிறைந்த, தேங்காய் பல்வேறு வகை உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் பால் மற்றும் எண்ணெய் ஆகியவையும் பிரித்தெடுக்கப் படுகின்றன.
தேங்காய் எண்ணெய், சருமம், கேசம் ஆகியவற்றுக்கு ஊட்டமளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய், மற்ற சமையல் எண்ணெய்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது.
தேங்காய் பால் பலவிதமான உணவு வகைகளில் மிக முக்கியமான மூலப்பொருள்.
இளநீர் ஒரு ஆரோக்கியமான பானமும் கூட. தேங்காயின் நார், கயிறுகள், விரிப்புகள் மற்றும் கதவு விரிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. தேங்காய்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
தேங்காயில் பொட்டாசியம், மாங்கனீஸ், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் உள்ளது. தேங்காயில், இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தேங்காய், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் தினக்கொண்டாட்டம் ஒருநாள் கொண்டாட்டமல்ல; வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியதாகும். நீரின்றி இவ்வுலகில்லை என்பதுபோல "தேங்காயின்றி எதுவுமில்லை!" சரிதானே!