
ஊட்டச்சத்து விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உணவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து வாரத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் "சிறந்த வாழ்க்கைக்கு சரியாக சாப்பிடுங்கள்" என்பதாகும். தேசிய ஊட்டச்சத்து வாரத்திற்கான ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் சில:
ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை உண்டு, நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு - தாமஸ் கார்லைல்.
இது ஆரோக்கியமான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பிரபலமான மேற்கோளாகும்.
உடற்பயிற்சி ராஜா. ஊட்டச்சத்து ராணி. அவற்றை ஒன்றாக இணைத்தால் உங்களுக்கு ஒரு ராஜ்ஜியம் கிடைக்கும். - ஜாக் லாலேன்
உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது ஒரு கடமை, இல்லையெனில் நம் மனதை வலுவாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முடியாது. - புத்தர்.
உங்கள் உணவுமுறை ஒரு வங்கிக் கணக்கு. நல்ல உணவுத் தேர்வுகள் நல்ல முதலீடுகள். - பெத்தேனி பிராங்கல்
நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீீ- பெயர் தெரியாதவர்
மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியம். - விர்ஜில்
ஆரோக்கியமான வெளிப்புறம் உள்ளிருந்து தொடங்குகிறது. -ராபர்ட் யூரிச்
உணவு உங்கள் மருந்தாகவும், மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும். - ஹிப்போகிரட்டீஸ்
ஒவ்வொரு கடியும் முக்கியம். அதை சத்தானதாக ஆக்குங்கள். - பெயர் குறிப்பிடாதவர்.
சரியான உணவு ஒருவரின் மனதையும் உடலையும் பலப்படுத்தும். ஆரோக்கியமான உணவு என்பது ஒரு நீண்ட கால முதலீடு, அதன் பலன்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
நல்ல ஊட்டச்சத்து என்பது பிரகாசமான எதிர் காலத்திற்கான திறவுகோல்.
உணவில் கவனம் செலுத்துங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குங்கள்.
ஆரோக்கியமான உணவு என்பது அனைவருக்கும் மலிவானது அல்ல; அதை அணுகக்கூடியதாக மாற்றுவது நமது கடமை.
சமச்சீர் உணவு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், கல்விக்கும் மற்றும் அவர்களின் வருங்கால ஆரோக்கியத்திற்கும் இன்றிமையாதது.