

1980களில் மத்திய அரசு ஆரம்ப பள்ளி பாட திட்டம் பற்றி விசாரணை செய்து ஆராய்ந்து ஒரு திட்டத்தை ஆலோசனை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
ஆம்...
யஷ்பால் தான் கமிட்டியின் தலைவர். பிறகு இந்த விசாரணை கமிட்டி 'யஷ்பால் கமிட்டி' என்று பெயர் பெற்றது.
'யஷ்பால் கமிட்டி' நன்கு விசாரித்து ஆரம்ப பள்ளி பாட திட்டம் பற்றி ஆராய்ந்து ஒரு பெரிய அறிக்கையை அரசிடம் அளித்தது.
ஐயோ..!
எல்லா விசாரணை கமிஷனும் கண்துடைப்பு வேலை என்று மீண்டும் முடிவானது.
'யஷ்பால் கமிட்டி' அறிக்கையும் புறக்கணிக்கப்பட்டு குப்பை கூடையில் சேர்ந்தது.
'யஷ்பால் கமிட்டி' சொன்ன பல்வேறு யோசனைகளில் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டுமே இங்கு எடுத்துக் கொள்கிறேன்.
1. மாணவர்கள் சுமக்கும் சுமை (சாப்பாட்டையும் சேர்த்து)
5 கிலோ தான் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியது. இது நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் எதற்காக கமிஷன் போட வேண்டும்..? எதற்காக ஆலோசனை கேட்க வேண்டும்… ? எல்.கே.ஜி… யு.கே.ஜி… எத்தனை கே.ஜி..?
சரி… விடுங்கள். அடுத்த ஆலோசனை மிகவும் முக்கியமான முடிவு. சிறந்த ஆலோசனை.
ஆம்.
2. 5-வது முடிக்கும் வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) கொடுக்க கூடாது.
இது கட்டாயம் என்று 'யஷ்பால் கமிட்டி' காட்டியது. இதற்கு மேல் வேறு ஒரு முடிவையும் யஷ்பால் கமிட்டி தந்தது.
5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக்கு எந்த புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் இல்லாமல் வந்தால் போதுமானது.
சரி. புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை என்ன செய்வது..? அதற்கும் யஷ்பால் கமிட்டி பதில் அளித்தது. 5-ம் வகுப்பு வரை எல்லா புத்தகம் மற்றும் நோட்டுகளை பள்ளியிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.
விளையாட்டு பருவத்தில் அவர்களுக்கு அவர்கள் மேல் சுமையை அளிக்க கூடாது என்று தெள்ளத்தெளிவாக சுட்டிக் காட்டியது.
மேலும் மாணவர்கள் 5ம் வகுப்பு வரை விளையாட்டு மற்றும் செய்முறை பயிற்சி மூலம் கற்க வேண்டும் என்று கூறியது.
இது மாணவர்களின் சுய சிந்தனையையும் வளர்க்கும்.
படித்த முனைவர்கள் மூலம் 5-ம் வகுப்பு வரை பாட திட்டத்தை எளிமையாக வர வைக்க வேண்டும். சந்தோஷமாக மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
ப்ளே ஸ்கூல் முதல் இரண்டு வருடங்கள். பிறகு 5ம் வகுப்பு வரை சுயசிந்தனை வளர்க்க செய்ய விளையாட்டு திட்டம் மற்றும் பாட திட்டம் வகுக்க வேண்டும்.
'யஷ்பால் கமிட்டி' என்னென்ன பரிந்துரை செய்துள்ளது என்பதை நான் முழுமையாக அறியவில்லை.
என் ஆலோசனை என்ன என்றால் வாரம் ஒருமுறை கதை வகுப்பு நடத்த வேண்டும்.
ஆம்.
சுதந்திர போராட்ட தியாகிகள்..
விஞ்ஞானிகள்…
உலக பிரபலங்கள்..
இந்திய பிரபலங்கள்..
பற்றி கதைகள் சொல்ல வேண்டும்.
கதை கேட்க மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள்.
அதேபோல் வாரம் ஒருமுறை ஒழுக்கம் பற்றி ஒரு கதையை சொல்ல வேண்டும்.
ஆம்.
விஞ்ஞான பாடத்திட்டம் மாணவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் இருந்தே கல்வி கற்க வேண்டும்.
ஆம்.
இன்றைய பாடத்திட்டம் சரி அல்ல. வெறும் மனனம் செய்யும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறது. மனனம் கல்வியில் ஒரு சிறிய இடமே இருக்க வேண்டும்.
ஆம்.
ஒடி விளையாடு பாப்பா..!