கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிடலாமா? - பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்!

Mango
Mango
Published on

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி பாடாய்படுத்தி விடும். அப்பொழுது எதை சாப்பிட்டால் வலி போகும் என்று மனது தவியாய் தவிக்கும். அதற்கும், பெண்களுக்கே தேவையான சில எளிமையான மருத்துவ குறிப்புகளையும் தெரிந்து வைத்திருந்தால் ஆபத்துக்கு உதவும். அவற்றுள் சில இதோ:

*மாதவிடாய் நேரங்களில் வரும் வயிற்று வலியை நீக்கவும் வலியை குறைக்கவும் பாகற்காய், வெண்டைக்காய், கல் உப்பு போட்டு வேக வைத்து அந்தச் சாறை வடிகட்டி கொடுக்க வலி குறையும்.

*மாதவிலக்கின் போது சில பெண்களுக்கு சோர்வு ஏற்படும். அப்பொழுது கோதுமையை கஞ்சி செய்து அடிக்கடி சாப்பிட்டு வர சோர்வு நீங்கும்.

*புதினா இலை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் ஒழுங்காகும்.

*புளிச்சக்கீரையை 8 ,9 வயது பெண் குழந்தைகளுக்கு வாரம் இரண்டு மூன்று முறை சமைத்து கொடுத்து வர வயதுக்கு வந்த பிறகு மாதவிடாய் பிரச்சனை இல்லாது இருக்கும்.

*வேப்ப இலையினை நன்றாக அரைத்து அதனுடன் பெருங்காயத்தை சுண்டைக்காய் அளவு எடுத்து மாதவிலக்கின் மூன்று நாட்களும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிடும் பொழுது அதனால் ஏற்படும் தாங்க முடியாத வயிற்று வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதே போல் மூன்று மாதங்கள் இதை மாதவிலக்கு நேரங்களில் மட்டும் சாப்பிட்டு வர அந்த வலியில் இருந்து நிரந்தர குணம் பெறலாம்.

*மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி வராமல் இருக்க அடிக்கடி இரவில் பேரிச்சம் பழத்துடன் ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் நிலநடுக்க தருணங்கள் - ஆபத்தான பகுதிகள் எவை?
Mango

*பெண்கள் சிலருக்கு மெனோபாஸ் சமயத்தில் பெரும்பாடு ஏற்படும். அப்பொழுது தர்ப்பை புல்லின் வேரை அரிசி கழுவிய நீருடன் சேர்த்து மைய அரைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.

*கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

*தாய்மார்களின் மசக்கைக்கு புதினா கீரையை கழுவி சுத்தம் செய்து அதனுடன் புளி வைத்து துவையலாக செய்து சாப்பிட்டு வர வாந்தி மயக்கம் நிற்கும்.

*பிரசவித்த பெண்கள் பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் உள்ள நச்சு நீரை வெளியேற்ற முக்கால் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். அது அரை டம்ளராக வற்றியதும் குடித்தால் நச்சு நீர் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*பிரசவமான பெண்களுக்கு வயிறு பெரிதாக இருக்கும். அப்பொழுது ஒரு பெரிய துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து அந்த நீரை தெளிய வைத்து வெல்லப்பாகில் ஊற்றி கொதி வந்ததும் ஆறவைத்து குடித்து வர வயிறு பெரிதாகாமல் இருக்கும். தினசரி குடித்து வர பெரியதாக இருக்கும் வயிறும் குறைந்து வரும்.

*பிரசவித்த தாய்மார்கள் பூண்டை வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் இடுப்பு வலி குறையும். வயிற்றில் தேவையற்ற திசுக்களையும் வெளியேற்றும். குழந்தைக்கு குடிப்பதற்கு பாலை பெருக்கும். வயிற்று கனம் குறைந்து லேசாகும்.

*பால் கொடுக்கும் தாய்மார்கள் நாவற்பழத்தை சாப்பிடக்கூடாது. அதில் உள்ள துவர்ப்பு சுவையானது குழந்தை குடித்த பாலை கக்க வைக்கும். கூடவே மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். அதனால் நாவல் பழத்தை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பணியிடத்தில் தொழில்சார் சுகாதாரம் (Occupational Health) - பராமரிப்பது எப்படி?
Mango

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com