
கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான். இதில் ஆண், பெண் பேதமில்லை. அர்த்தநாரீஸ்வரர் சொல்வது என்ன..! ஆண் பாதி. பெண் பாதி.
ஏனெனில்.. ஆண் = பெண் = சரிசமம்.
இது தெளிவாக உள்ளது.
இப்போது ஒரு கேள்வி பிறக்கிறது. அதாவது பெண்கள் சபரிமலை செல்லலாமா..? இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
பெண்கள் சபரிமலை செல்லக்கூடாது என்று 1940களிலேயே நடைமுறைக்கு வந்தது.
ஏன்..?
பெண் மாதவிடாய் ஆகிறவர். அதனால்தான் என்று ஒரு சாரார் சொல்வது அபத்தம் ஆனது. மாதவிடாய் என்பது என்ன..? அது ஒரு கழிவு மட்டுமே. பின், அப்படி சொல்வதற்கு என்ன காரணம்?
அப்போது சபரிமலை பயங்கரக் காடாக இருந்தது. பெண்கள் சபரிமலை வந்தால்… அதாவது மாதவிடாய் உடன் வந்தால் அந்த உதிர (ரத்த) வாசனை புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் மோப்பம் பிடித்து வர வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்போது சபரிமலை ஒரு சின்ன நகரமாகவே இருக்கிறது. மின் விளக்கு, நடைபாதை எல்லாம் வந்துவிட்டது. எனவே வனவிலங்குகள் சபரிமலை பாதையில் வருவது இப்போது ஆபூர்வம்.
எனவே, பெண்கள் சபரிமலை செல்லலாம்.
ஆண் கழிவுகளுடன் (சிறுநீர், மலம்) சபரிமலை செல்லும்போது பெண்கள் கழிவுகளுடன் ஏன் போகக்கூடாது..?
ஆணுக்கு ஒரு சட்டம்.
பெண்ணுக்கு ஒரு சட்டமா..?
இந்த நடைமுறை பெண்களுக்கு எதிரானது. பெண் உரிமை மறுக்கும் நடைமுறை.
உண்மையில் தெய்வ பக்தி இருப்பவர்கள்… அது ஆணோ, பெண்ணோ என்று பார்க்கமாட்டார்கள்.
அரசியல் சாசனம்… கடவுள் நம்பிக்ககைக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை.
ஆணுக்கு இருக்கும் உரிமையை பெண் இடமிருந்து பறிப்பது துரோகம். தவறு. மாதர் தம்மை இழிவு செய்யும் நடைமுறைக்கு கொள்ளி வைக்க வேண்டும்.
அரசியல் சாசனம் எல்லோருக்கும் சமநீதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, பெண்களை சபரிமலை செல்ல சம்மதம் தராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
பொதுவாக பெண் மாதவிடாய் காலத்தில் எந்தக் கோயிலுக்கும் செல்வது இல்லை. யாரும் அவர்களை வரக்கூடாது என்று சொல்வது இல்லை.
ஆனால், பெண்களாகவே தம்மை தான் கோயிலுக்குச் செல்லாமல் உள்ளனர். இது பெண்களின் சிறப்பு.
மற்றும் ஒரு வாதம்.
ஐயப்பன் பிரம்மசாரி… ஆதலால் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லி வஞ்சம் செய்கிறார்கள்.
பிரம்மசாரி என்றால் பெண்கள் போகக்கூடாதா? ஐயப்பன் பிரம்மசாரி வடிவில் இருப்பதால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.
ஐயப்பன் கடவுள். கடவுள் சத்தியத்தை மட்டுமே விரும்புவார். ஆண், பெண் வித்யாசம் என்பது அவருக்கு இல்லை. மனிதன்தான் எல்லாவற்றையும் பூதாகரமாக மாற்றுகிறான்.
இருக்கட்டும்.
ஐயப்பன் தனது திருமணம் பற்றி என்ன சொல்கிறார்…?
எந்த வருடம் சபரிமலைக்கு புதிய சாமியாக பக்தன் வரவில்லையோ அப்போது நான் மாளையபுரத்து அம்மனை மணம் முடிப்பதாக சொல்லி இருக்கிறார்.
இது நடக்குமா…!
சாத்தியமே இல்லை.
வருட வருடம் புதிய கன்னி சாமிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே, நாம் ஐயப்பன் திருமணம் பார்க்க முடியாது.
கடைசியாக ஒரே ஒரு விஷயம்தான்.
ஐயப்பன் ஆண், பெண் பேதம் பார்ப்பது இல்லை. எனவே பெண்களும் சபரிமலை செல்ல எந்தத் தடையும் இல்லை.
ஆண்-பெண் இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்யட்டும்.
ஆம்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமே…!
இதுவே என் கருது!
சாமி சரணம்..!