
தயிர் சாப்பிடுவதால் வயிற்றில் உண்டாகும் வறட்சி குளிர்ச்சி அடைகிறது.
தயிரும் புளிக்காத மோரும் ஆரோக்கியத்துக்கு முக்கியம்.
மேல் நாட்டவர்களும் இந்தியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்களும் தயிரை உட்கொள்வதோடு அல்லாமல் தலை கை, கால் உடல் பாகங்களிலும் தடவி பயன் அடைகிறார்கள் .
மேல் நாட்டு பியூட்டி பார்லர்களில் தயிருடன் பழரசம், பாதாம் எண்ணெய் முதலியவை கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து பிறகு கழுவுகிறார்கள். இவ்விதம் செய்வதால் இளமையும் பளபளப்பும் பாதுகாக்கப்படுகிறது என்கிறார்கள்.
தயிருடன் சுண்ணாம்பை சம அளவு கலந்து குழைத்து சுளுக்கிய இடத்தில் மூன்று முறை போட்டால் சுளுக்கு விடுபட்டு விடும்.
தயிரில் வெங்காயம் நறுக்கி உணவுடன் கலந்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும் .
முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு தயிருடன் துவரம் பருப்பை சேர்த்து நன்கு அரைத்து தினமும் தடவி பதினைந்து நிமிடம் ஊறிக் கழுவினால் பத்து நாட்களில் குணம் தெரியும்.
முக அழகிற்கும் பளபளப்பிற்கும் பாதுகாக்க அழகு நிலையங்களில் தயிருடன் ஓட்ஸ் மாவை கலந்து முகத்தில் தடவுவார்கள். ஜப்பான் சீனா தேசத்தில் தயிருடன் அரிசி சாத கஞ்சியை தடவுகிறார்கள்.
மோருடன் பன்னீரும் வாதுமை எண்ணையும் கலந்து முகம் மற்றும் கை கால்களை தடவி ஊறிய பிறகு குளிக்கலாம்.
தயிருடன் ஈஸ்ட் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறி வெந்நீரில் கழுவது இங்கிலாந்து நாட்டில் முறை.
உஷ்ண எரிச்சல் உபாதைக்கு ஐந்து தேக்கரண்டி மோருடன் ஐந்து தேக்கரண்டி தக்காளி சாறு கலந்து தடவலாம்.
தயிரில் உள்ள புரோட்டின் பாலில் உள்ள புரோட்டினை விட சீக்கிரமாகவே ஜீரணம் ஆகிவிடும். தயிர் நம் உடலுக்கு ஒரு அருமருந்து. குளிர்ச்சியை தரும். நல்ல ஜீரண சக்தியையும் தரும்.
வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் எடுத்துக் கொள்ளலாம். அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிரை கலந்து காய்ச்சினால் நெய் வாசமாக இருக்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலைமுடியும் மிருதுவாக இருக்கும்.
தயிர் புளிக்காமல் இரண்டு நாட்கள் இருக்க தேங்காயை சிறு துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
வெண்டைக்காய் வதக்கும் போது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல் பிசு பிசுக்கில்லாமல் இருக்கும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும் பட்டு போன்றும் மாறும்.
தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும் மேலும் சருமம் மென்மையாகும்.
தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனை இருந்து விடுபடலாம்.
ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள் தொடர்ந்து இதனை செய்யும் போது உங்கள் வறண்ட டல்லாகியிருந்த சருமம் டாலடிக்கும் ..
நன்றி: ஆரோக்கியம் தரும் உணவுகள் என்ற நூல்