
பெண்கள் தற்போது எங்கே வெளியே சென்றாலும் "ஹேண்ட் பேக்' உடன் செல்கிறார்கள். ஆனால் அது முதன் முதலாக ஆண்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது என்பது தெரியுமா?.
14 -ம் நூற்றாண்டில் எகிப்தில் ஆண்கள் தங்களது சிறு உடைமைகளை ஒரு பவுச்சில் வைத்து அதை இடுப்பில் மாட்டிக்கொண்டு சென்றார்கள். பின் 1923-ம் ஆண்டு அது "ஜிப்'யுடன் கூடிய பையாக மாறியவுடன் ஆண்களும், பெண்களும் பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் "ஹேண்ட் பேக்' என்றானது.
பெண்கள் பயன்படுத்தி வரும் ஹேண்ட் பேக்களில் பல வகைகள் உள்ளன. சாதாரண ஹேண்ட் பேக் முதல் விலை உயர்ந்த வைரம் பதித்த ஹேண்ட் பேக் வரை உள்ளது. உலகளவில் 18 வடிவங்களில் ஹேண்ட் பேக்கள் தயாரிக்கப்படுகிறது.
ஹேண்ட் பேக்கள் துணி, தோல் மற்றும் பிளாஸ்டிக் வயர்கள் மூலமாக தயாரிக்கப்பட்டாலும் உலகளவில் பெண்கள் விரும்புவது லெதர் பேக்களைத்தான். அதிலும் கருப்பு மற்றும் பிரெவுன் கலர் பேக்களைத்தான் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.
இதுதான் உலகிலேயே விலை உயர்ந்த லேடிஸ் ஹேண்ட் பேக். இத்தாலிய நிறுவனமான "போரினி மிலானி' அறிமுகப்படுத்தியுள்ள இந்த பேக்கின் விலை 6மில்லியன் யுரோ (53 கோடிகள்). பளபளப்பான முதலைத்தோலால் தயாரிக்கப்பட்டுள்ள இதில் 10 வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் ரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேண்ட் மேக் ஒன்றை தயாரிக்க 1000 மணி நேரங்கள் ஆனதாம். இது வரை மூன்று ஹேண்ட் பேக்களை மட்டும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
பயன்படுத்தாதபோது ஹேன்ட் பேக்களை காட்டன் பைகளில் சுற்றி பாதுகாப்பது சிறந்தது. எப்போதும் ஹேன்ட் பேக்களை அலமாரிகளில் நிற்க வைத்து வையுங்கள். ஹேன்ட் பேக்களை நீண்ட காலம் பயன்படுத்த அவற்றை வாரம் ஒருமுறை தூசி தட்டி சுத்தம் செய்து வையுங்கள்.
ஹேன்ட் பேக்களை நீண்ட காலம் பாதுகாக்க அதில் பாட்ஷா உருண்டைகளை போட்டு பாதுகாக்க வேண்டாம்.. வேப்பிலை போட்டு பாதுகாப்பது போதுமானது. உங்கள் ஹேன்ட் பேக்களை நீண்ட காலம் பயன்படுத்த மாட்டீர்கள் என்றால் அதன் உள்ளே பழைய நியூஸ் பேப்பரை வைத்து வையுங்கள் அப்போதுதான் அதன் வடிவம் மாறாமல் இருக்கும்.
ஹேன்ட் பேக்களை நீண்ட அலமாரிகளில் முறையாக நீளவாக்கில் அடுக்கி வைப்பதால் நீண்ட நாள் புதிது போல பயன்படுத்தலாம். வளையங்களில் கூட தொங்கவிட்டும் வைக்கலாம்.