

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உடல்நலத்தை பாதுகாக்கும் என்பது பொதுவான கருத்து. பெண்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 3.5 மணி நேரம் (தினமும் 30 நிமிடங்கள்) நடைப்பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஸ்ட்ரோக் மற்றும் சில வகை நோய்கள் நெருங்காது என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். அதே போல சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யும் போது மற்றவர்களை விட அந்த பெண்களுக்கு 43 சதவீதம் ஸ்ட்ரோக் ஆபத்து குறையும் என்கிறார்கள் .
ஒரு நாளைக்கு 200 கிராம் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது புற்றுநோய்களின் சாத்தியத்தை மூன்று சதவீதம் குறைக்கிறது. பெண்களிடம் இது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் ஐரோப்பிய புற்றுநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.
காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தியும், செயல்திறனும் அதிகரிக்கிறது. அதில் உள்ள வைட்டமின் 'ஈ' வயதாவதால் வரும் ஞாபக சக்தி குறைபாட்டையும், கவனக் குறைவையும், சுறுசுறுப்பின்மையையும் பெருமளவு குறைக்கும் என்கிறார்கள் சிகாகோவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
தக்காளி, கேரட் போன்ற பச்சை காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்து வர பெண்களுக்கு வரும் ஆஸ்துமாவை விரட்டி அடிக்க உதவும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்.
கால்சியம் சத்தும், வைட்டமின் 'டி' சத்தும் உடலில் போதுமான அளவில் இருந்தால் பருவ வயதை அடையும் பெண்களுக்கு மாதவிடாய் தொல்லை அதிகம் இருக்காது. இதனை பெற தினமும் இரண்டு வேளை பால் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஆர்க்கீவ்ஸ் இண்டர்நேஷனல் மெடிசின் ஆய்வாளர்கள்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு தொந்தரவு தருவது பி.எம்.எஸ் எனும் ஹார்மோன் மாற்றங்கள் இதனால் வருவது தான் தேவையற்ற எரிச்சல் மற்றும் கோபம் இந்த தொந்தரவுகளை குறைக்க இயற்கையான ஹார்மோன் உடலில் சேர்வது நல்லது. சேனைக்கிழங்கு மற்றும் சோயா பீன்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றில் 'புரொஜஸ்டிரான்' எனும் இயற்கை ஹார்மோன்களை தூண்டும் சக்தி உண்டு என்கிறார்கள்.
கொழுப்பு மிக்க உணவு வகைகளை அதிகம் உண்பதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.கொழுப்பு மிக்க உணவுகள் உண்ணும் சிறுமிகள் விரைவில் பூப்படைவதும் இதனால் தான் என்கிறார்கள்.
முகத்தோற்றம், உடல் அமைப்பிலும் விரைவில் முதுமை தோற்றத்தை கொண்டு வருவதில் உடற்கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், இளமை நீடிக்க கொழுப்பு உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது என்கிறார்கள் லண்டன் தாமஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
பேரீச்சம்பழத்தின் தனித்துவமான நன்மைகளில் இதுவும் ஒன்று. கர்ப்பத்தின் கடைசி சில வாரங்களில் பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவது, பிரசவத்தை எளிதாக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள சில சேர்மங்கள், பிரசவ வலியைத் தூண்டும் ஆக்ஸிடோசின் ஹார்மோனின் விளைவைப் பிரதிபலித்து, கர்ப்பப்பை வாய் திறப்பை (Cervical Dilation) மேம்படுத்தி, இயற்கையான பிரசவத்திற்கு உதவுகின்றன என்கிறது NCBI ஆய்வு.
பெண்மை குறைவு ஏற்பட்டவர்கள் அடிக்கடி எரிந்து விழுவார்கள். இவர்கள் தினமும் ஸ்டிராபெர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் போதும். மலட்டுத்தன்மையும் குணமாகும். மலட்டுத்தன்மை வராமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.
புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்கும், எந்த சூழ்நிலையிலும் கரையாத ஆன்டி ஆக்ஸிடென்ட் காபியில் உள்ளது. எனவே, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி சாப்பிடுங்கள் என்கிறார்கள் அமெரிக்க ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதனால் மனதிற்கு ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கிறது. வீடு அலங்கோலமாக கிடந்தால் மன உளைச்சலும், மன அழுத்தமும் ஏற்படும் என்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.