சருமம் நச்சு நீங்கி மின்ன... அருந்த வேண்டிய 10 பழச்சாறுகள்... எப்பெப்போ? என்னென்ன?

காலையும் இரவிலும் சரியான பழச்சாறுகள்: நச்சு நீங்கி, கொலாஜென் அதிகரித்து, முகத்தில் இயற்கை பொலிவு பெறும் ரகசியம்
skin glow juices
skin glow juices
MM strip
MM strip

ருமம் நச்சு நீங்கி உள்ளும் புறமும் நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து மின்ன, காலையிலும் இரவிலும் நீங்கள் அருந்த வேண்டிய பழச்சாறுகள் எவை எவை தெரியுமா?

காலையிலும் இரவிலும் ஃபிரஷ் ஃபுரூட் ஜூஸ் குடிப்பது செல்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திலுள்ள வீக்கங்கள் குறையவும், கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கவும் உதவி புரியும். எந்த விதமான பழச்சாறை (skin glow juices) எப்போது குடிக்கலாம் என்பதை விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

1. 1.லெமன் வாட்டர்:

lemon water
lemon water

இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும், உடலில் நீரேற்றம் குறையாமல் பாதுகாக்கவும் உதவும். இதை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது சிறந்த பலன் தரும்.

2. 2.கிரீன் டீ:

green tea
green tea

கிரீன் டீயில் நிறைந்துள்ள கேட்டச்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடவும், உடலிலுள்ள வீக்கங்கள் குறையவும், பருக்கள் தோன்றுவதை தடுக்கவும் உதவி புரியும். சருமத்தின் உள் பகுதியில் உற்பத்தியாகும் எண்ணெய் பசையை சமநிலைப்படுத்தி ஸ்கின் டெக்ச்சர் எப்பொழுதும் மேன்மையுற்றிருக்கச் செய்யும். இதை காலை அல்லது மாலை நேரத்தில் குடிக்கலாம்.

3. 3. இளநீர்:

ilaneer
ilaneer

இது இயற்கை முறையில் நீரேற்றம் தருவது. பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது. சருமத்தின் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வல்லது. காலை அல்லது மாலை நேரத்தில் குடிக்க ஏற்றது.

4. 4.மாதுளை ஜூஸ்:

pomegranate juice
pomegranate juice

இரத்த ஓட்டத்தை சீராக்கும். சரும செல்களுக்கு ஆக்ஸிஜனை குறைவின்றி வழங்கி, கொலாஜென் உற்பத்தி அதிகரிக்க உதவும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றுவதையும், சுற்றுசூழல் மாசுக்களால் சருமம் பாதிப்படைவதையும் தடுத்து நிறுத்தும்.

5. 5.பீட்ரூட் ஜூஸ்:

beetroot juice
beetroot juice

இது நச்சுக்களை நீக்கும் செயலில் கல்லீரலுக்கு உதவி புரியும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள இரும்புச் சத்து, இறந்த செல்களை நீக்கி அந்த இடத்தில் புத்துருவு பெற்ற ஆரோக்கியமான புதிய செல்களை உருவாக்க உதவும். இந்த ஜுஸை காலையில் அருந்துவது நலம்.

6. 6.ஆலோவேரா ஜூஸ்:

aloe vera juice
aloe vera juice

வயிற்றுக்குள் இருக்கும் நச்சுக்களையும் வீக்கங்களையும் நீக்கி, இரைப்பை குடல் ஆரோக்கியதை பாதுகாக்க உதவும் ஜூஸ் இது. சிதைவுற்ற சருமத்தை சீராக்கும். முகப்பரு தோன்றுவதையும், முகம் சிவந்த நிறமடைவதையும் தடுத்து நிறுத்தும். காலையில் அல்லது இரவில் குடிக்க ஏற்றது.

7. 7.வெள்ளரி நீர்:

cucumber juice
cucumber juice

உடலுக்கு நீரேற்றமும் குளிர்ச்சியும் தருவதில் முதன்மையானது. உப்பலான சருமத்தை சம நிலைப்படுத்தும். எரிச்சலுற்ற சருமத்தை அமைதிப்படுத்தி, நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று விளங்க உதவும். எந்த நேரமும் அருந்தி மகிழலாம்.

8. 8.கேரட் ஜூஸ்:

carrot juice
carrot juice

இதிலுள்ள அதிகளவு பீட்டா கரோட்டின் உடலுக்குள் சென்று வைட்டமின் A யாக மாறுகிறது. பின் அது சருமம் சூரியக் கதிர்களால் பாதிப்படைவதையும் விரைவிலேயே உடல் வயதான தோற்றம் பெறுவதையும் தடுத்து நிறுத்துகிறது. காலையில் குடிப்பது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
வெயிலில் கருகிய சருமம் வெள்ளையாகணுமா? இதை மட்டும் தடவுங்க போதும்!
skin glow juices

9. 9.மஞ்சள் தூள் கலந்த பால்:

turmeric milk
turmeric milk

உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். முகப் பருக்களை நீக்கவும், எரிச்சலுற்ற சருமத்தை அமைதியுறவும் செய்யும். ஒரே இரவில் இறந்த செல்களை நீக்கி புதியவைகளை உரு வாக்கிட உதவும். இரவில் பருகுவது ஆரோக்கியம் தரும்.

10. 10.ஆரஞ்சு ஜூஸ்:

orange juice
orange juice

அதிகளவு வைட்டமின் C கொண்டது. கொலாஜென் உற்பத்தி பெருகவும் சருமத்தில் உள்ள கருந்திட்டுகள் மறையவும் உதவி புரியும். சருமத்தின் மேற்பரப்பு பள பளப்பும் இளமைத் தோற்றமும் பெறச் செய்யும் ஜூஸ் இது. உடலின் நச்சுக்கள் நீங்கவும் பயன்படும். காலை நேரம் குடிப்பது நன்மை தரும்.

logo
Kalki Online
kalkionline.com