நம் இந்தியர்களின் ஒவ்வொருவரின் சமையலறையிலும் மசாலா பொருட்கள் இல்லாத வீடே கிடையாது. அன்றாடம் இந்த மசாலா இல்லை என்றால் சமையலே ஆகாது. அது வெஜிடேரியனாக இருக்கட்டும் அல்லது அசைவமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் இந்த மசாலாவை போடவில்லை என்றால் சுவை வராது. அந்த காலத்தில் இந்த மசாலாவை வீட்டிலேயே அம்மியில் அரைத்துக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பாக்கெட்டில் பவுடராக கிடைக்கிறது.
எந்த உணவாக இருந்தாலும் இந்த மசாலாவை போடவில்லை என்றால் சமையலின் சுவை நிறைவடையாது. அதிலும் குறிப்பாக இந்த கரம் மசாலா ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முக்கியமான மற்றும் சுவையை மெருகூட்டும் பொருளாகவே கருதப்படுகிறது.
உடனே 'கரம் மசாலா' வாங்க...
சரி, இந்த கரம் மசாலாவில் என்னென்ன பொருட்கள் உள்ளடங்கி இருக்கின்றன? ஏன் இதை கரம் மசாலா என்றழைக்கிறார்கள்?
இந்த கரம் மசாலாவில் சீரகம், கொத்தமல்லி விதை, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, ஜாதிக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலைகள், பெருஞ்சீரகம், கடுகு, மஞ்சள், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் பல பொருட்கள் அடங்கி இருக்கின்றன.
அவரவர்களுடைய மாநிலம் மற்றும் வீட்டின் சுவைக்கேற்றவாறு பொருட்களை சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்கிறார்கள். இல்லை என்றால் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மசாலாவை வாங்கி உபயோகிக்கிறார்கள்.
வட இந்தியாவில் இந்த கலவையில் கருப்பு மிளகு அதிகமாக இருக்கும். ஆகவே, அதன் நிறமும் சிறிது கருப்பாக இருக்கும். ஆனால், தென்னிந்தியாவில் உலர்ந்த சிவப்பு மிளகாய்களை அதிகமாக சேர்ப்பதன் காரணமாக அது காரமாகவும் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
கரம் மசாலா என்ற பெயர் இந்த கலவைக்கு ஏன் வந்ததென்றால், இந்த கலவையில் உள்ள அனைத்து பொருட்களுமே உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தி ஜீரண சக்தியை தரக் கூடியவை. ஆகவே, இதற்கு கரம் மசாலா என்ற பெயர் வந்தது. ஹிந்தியில் கரம் என்றால் சூடு என்று பொருள்.
இன்னொரு காரணம் என்னவென்றால் இந்த மசாலாவை சேர்த்து சாப்பிடும் போது கார சாரமாக இருக்கும். அதாவது ரொம்ப Spicy ஆக இருக்கும். ஆகவே இதை கரம் மசாலா என்று கூறுகிறார்கள்.
மூன்றாவது காரணம் என்னவென்றால் இந்த மசாலாவை சமையல் செய்யும் போதோ சூடாக இருக்கும் போதோ கலந்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சமையல் செய்து முடித்து ஆறிய பிறகு இந்த மசாலாவை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த கலவைக்கு ஏன் 'கரம் மசாலா' என்ற பெயர் வந்ததென்று..
உடனே 'கரம் மசாலா' வாங்க...