

இன்றைய காலகட்டத்தில் தங்கம், வெள்ளியின் விலை போட்டிப் போட்டு கொண்டு ஏறிக்கொண்டிருக்கிறது. பல சாமானியர்களுக்கு இவை தங்கள் (Gold) அந்தஸ்தையும், பகட்டையும் பறைசாற்றும் பொருட்களாகத் தோன்றினாலும் உண்மையில் இவை எந்தெந்தக் காரணங்களுக்காக மனிதர்களால் உபயோகிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
மனித வாழ்வில் ஆபரணங்களின் பங்கு: பல்வேறு நாகரிகங்களில் ஆபரணங்கள் வெறும் அலங்காரப் பொருட்களாக மட்டுமல்லாமல் அதற்கும் மேலாகத்தான் கருதப்பட்டன. பண்டைய இந்திய மரபில் 36 ஆபரணங்கள் அத்தியாவசியப் (essential) பயன்பாட்டில் இருந்தன. அவை ஒவ்வொன்றும் நரம்புகளைத் தூண்டவும் (stimulate nerves), ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடல் வெப்பநிலையைப் பராமரிக்கவும் சில காலங்களில் உதவின.
ஆபரணங்களை அணிவதால் அறிவியல்பூர்வமாக உணரப்பட்ட சில நன்மைகள்:
தங்க ஆபரணங்கள்: உயிர்ச் சக்தியை அதிகரிக்கின்றன(Enhance vitality), உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனம். மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
வெள்ளி ஆபரணங்கள்: பூமியின் ஆற்றலுடன் நம்மைத் தொடர்பு படுத்தக்கூடியவை(conductors of Earth’s energy). உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்கின்றன. உடலில் வெப்பத்தைக் குறைக்க உதவுகின்றன.
செம்பு ஆபரணங்கள்: ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும், ஆற்றல் சமநிலையைப் பராமரிக்கவும் (energy equilibrium) உதவுகின்றன.
மெட்டி (Toe rings), கொலுசுகள் (anklets): பாரம்பரியமாகப் பெண்கள் அணியும் இவை உடலில் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
கம்மல், மூக்கு வளையங்கள் (Nose rings): அக்குபிரஷர் புள்ளிகளைச் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது(activate acupressure points), இதனால் மனத் தெளிவும், சுவாச ஆரோக்கியமும் மேம்படுகிறது.
காலநிலை மற்றும் அந்தந்த நாட்டின் நிலைக்கேற்ப ஆபரணங்களின் நன்மைகள் மாறுபடுமா?
ஆபரணங்களின் நன்மைகள் காலநிலை மற்றும் புவியியல் (climate and geography) பொறுத்து பரவலாக வேறுபடுகின்றன. இந்தியா போன்ற வெப்பமான காலநிலையில், வெள்ளி (Silver) வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன. அதே சமயம் உலகின் குளிர்ந்த பிராந்தியங்களில் (Colder regions) அங்கு மனிதர்களுக்குத் தேவையான வெப்பத்தைத் தக்க வைக்க தங்கம் அதிகம் விரும்பப்படுகிறது.
இதேபோல் கலாச்சார மரபுகளும் ஆபரணங்களின் பயன்பாட்டைத் மக்களிடம் அதிகம் ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் மூக்குத்திகளில் இருக்கும் சிறப்புகள் போல, சீனர்களால் கழுத்தில் அணிந்து கொள்ளப்படும் ஜேட் பதக்கங்கள் (jade pendants) அல்லது ஆப்பிரிக்காவில் மணிகளால் (beadwork) செய்யப்பட்ட ஆபரணங்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் ஆபரணங்களுக்கு என சில தனித்துவமான நன்மைகள் இருக்கின்றன.
நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
உண்மையில் மனித உடலுக்கு மிகவும் அவசியமானது ஆடை. தேவைப்பட்டால் சில பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற விஷயங்களே ஆகும். ஆபரணங்களாக பயன்படுத்தப்படும் தங்கம், செம்பு அல்லது வெள்ளி போன்றவை அறிவியல் ரீதியாக உணரப்பட்ட சில சிறிய நன்மைகளை வழங்கினாலும், இவை உலகளவில் நிரூபிக்கப்பட்டவையோ அல்லது கட்டாயம் உபயோகிக்க வேண்டிய அத்தியாவசியமானவையோ அல்ல. எனவே, அந்தந்த சூழ்நிலைக்கேற்பத்தான் அதன் தேவைகளும், நன்மைகளும் இருக்கின்றன.