
பெண்கள் நெற்றியில் குங்குமம் இட்ட கருப்பு மறைய சந்தன மரக்கட்டையுடன் வில்வ மரக்கட்டையை சேர்த்து அரைத்து பூசி வந்தால் கருப்பு மறைந்து போகும். கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை இலுப்பை இலையுடன் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சொத்தை நகம் நீங்கி புதிய நகம் வளரும்.
காலில் கண்ணாடித் துண்டுகள் குத்திவிட்டால் ஓமத்தை வெல்லத்துடன் அரைத்துக் கிளறிக் கட்டினால் எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டும் வெளியே வந்து விடும். தெரிந்தோ, தெரியாமலோ உடலுக்குள் நச்சுப்பொருள் போய்விட்டால், வேப்ப மரத்து இலை கொழுந்தை அரைத்து தயிர் கலந்து குடித்தால் உடனே விஷ முறிவு ஏற்படும்.
வெள்ளரிக்காய் சாற்றுடன் எலுமிச்சை சாற்றையும் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகம் கழுவிவிட்டால் முகம் பளபளப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு கன்னத்தில் சொர சொரப்பாக கரும்புள்ளிகள் தோன்றினால் ஜாதிக்காயை சிறிது நீர் விட்டு அரைத்து விழுதை தடவி வந்தால் சொர சொரப்பு குணமாகும்.
வெள்ளை மிளகுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து பாலில் கலந்து தலை முழுகினால் பொடுகு எல்லாம் நீங்கும். வாயப்பிடிப்பு உள்ளவர்கள் முருங்கைப் பட்டுச்சாற்றுடன் பெருங்காயத்தூளை கலந்து பிடிப்பதற்கு இடங்களில் தேய்த்தால் பிடிப்பு உடனே விலகும்.
உப்பு, சுடு சோறு, வெங்காயம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் நகச்சுற்று குணமாகும். வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த வெற்றிலை சுண்ணாம்பு கலவையை நகச்சுத்தி மீது பூச குணமாகும்.
குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தலைவலி வரும்போது பொடியை முகர்ந்தால் தலைவலி உடனே நிற்கும். வேப்பம் பூவை ரசமாகவும், துவையலாகவும் செய்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
புளியையும், வெல்லக்கட்டியையும் சேர்த்து கரைத்து அருந்தினால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டை உடனே தணிக்க மோரில் சிறிது சர்க்கரை கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.
கருஞ்சீரகத்தை வினிகர் விட்டு அரைத்து அதை கட்டிகள் மீது தடவி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி வலி குறைந்து விரைவில் கட்டி சரியாகும்.
சாதிக்காய்யைக் காயவைத்துத் தூளாக்கி வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். நாயுருவி வேரைப் பச்சையாக மென்று சாற்றை மட்டும் உட்கொள்ள தேள் காட்டியதால் ஏற்பட்ட நெறி உடனே இறங்கும்,
அடிபட்ட வீக்கம், நரம்புப் பிறழ்வு, சுளுக்கு ஆகிய வெளி பாதிப்புகளுக்கு இந்த கரியபேளத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும். இரத்தக் கட்டு இருந்தால் தொடர்ந்து இதை போட்டால் படிப்படியாக அது குணமாகும். சரும வெடிப்பு, வெட்டு, தீக்காயம் உள்பட பல பாதிப்புகளுக்கு இது பயன்படுகின்றது.
வேப்பிலை, துளசி, புதினா இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடி செய்து அதனை பாலாடையில் குழைத்து முகப்பருக்கள் மேல் தேய்த்தால் முகப்பருவின் தழும்புகள் ஏற்படாது. முகம் பளபளப்பாக இருக்கும். உடலில் திடீரென அரிப்பு தோன்றினால் தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைசாறு விட்டுக் கலந்து குளிக்க உடலின் மேல் தோன்றும் அரிப்பு உணர்வு மறையும்.
சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்த பொடியை காலை, மாலை இரண்டுவேளை இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் சரியாகும்.
ஒரு டம்ளரில் கேரட் சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்துவிட்டு குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் வாந்தி, குமட்டல் பிரச்னை உடனே சரியாகும்.